5000 எம்ஏஎச் பேட்டரி, 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ02: விலை தெரியுமா?
சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை குறித்த அறிவிப்பு இல்லை என்றாலும் இதன் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ02
சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, 1560x720 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் வருகிறது. அதோடு இந்த ஸ்மார்ட்போன் 1.5GHz மூலம் இயக்கக்கூடிய மீடியாடெக் எம்டி6739 குவாட்கோர் எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ02 வேரியண்ட்கள்
சாம்சங் கேலக்ஸி ஏ02 விலை விவரங்களை இதுவரை அறிவிக்கவில்லை. இந்த ஸ்மார்ட்போன் மூன்று வேரியண்ட்களில் வருகிறது. இது 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி, 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி, 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி ஆகியவற்றை கொண்டுள்ளது.

கேலக்ஸி ஏ02 வண்ண விருப்பங்கள்
சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் டெனிம் பிளாக், டெனிம் ப்ளூ, டெனிம் ரெட் மற்றும் டெனிம் க்ரே என்ற வண்ண விருப்பங்களில் வருகிறது. அதேபோல் பாதுகாப்பு அம்சத்திற்கான கைரேகை சென்சார் இதில் இல்லை.

கேமரா அம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சமாக 64 ஜிபி உள்சேமிப்பு வசதி இருந்தாலும், இதில் 1டிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி இருக்கிறது. கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில் இதன் முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு இருக்கிறது. அதேபோல் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ02 இணைப்பு ஆதரவுகள்
சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஆதரவு மூலம் இயக்கப்படுகிறது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி, 7.75 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு ஆகியவை உள்ளன. இதில் இரட்டை 4ஜி வோல்ட்இ உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகள் உள்ளன.
File Images


Click it and Unblock the Notifications