சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.! என்ன தெரியுமா?
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான One UI 3.1 அப்டேட்-ஐ பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக ரஷ்யாவில் உள்ள கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இந்த புதிய அப்டேட் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் அனைத்து நாடுகளிலும் உள்ள பயனர்களுக்கும் இந்த புதிய
அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தான் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளது. இதுதவிர ஒரு பாதுகாப்பு அப்டேட் வசதியும் இந்த சாதனத்திற்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்போது கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் மாடலின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 720 x 1,600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக இந்த கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போனில் குவாட்-கோர் மீடியாடெக் MT6739W SoC சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 7.75 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்தஅட்டகாசமான ஸ்மார்ட்போன். இந்த கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் ஆனது 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுலாகமெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ப்ளூடூத் வி5, 4ஜி எல்டிஇ, 3.5எம்எம் ஹெட்போன் ஜாக்,வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் அனைத்து நாடுகளிலும் உள்ள கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு புதிய அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications