Home
Mobile

விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன்.!

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான்
கூறவேண்டும்.

விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன்.!

சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் Infinity-V டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் 1560 x 720 பிக்சல்கள் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன்.!

சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

இந்த புதிய கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் எம்டி6739 குவாட்-கோர் எஸ்ஒசி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன்.!

சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்காது. மேலும் 7.75 வாட் சார்ஜிங் ஆதரவு,கைரேகை சென்சார் வசதி உட்பட பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.1, 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய கேலக்ஸி ஏ02 மாடல். குறிப்பாக இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்.

விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன்.!

அதேபோல் சாம்சங் இந்த ஆண்டு பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மற்ற நிறுவனங்களை விட தனித்துவமான அம்சங்களை கொண்டு சாம்சங் ஸ்மார்ட்போன்கள் வெளிவருவதால் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A02 May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X