விரைவில் வெளிவரும் அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போன்.!
சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனை சாம்சங் தனது இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பாரப்போம்.

அட்டகாசமான டிஸ்பிளே
இந்த கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போன் ஆனது 5.7-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,மேலும் 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருமையான சிப்செட் வசதி
சாம்சங் நிறுவனத்தின் இந்த கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் குவாட் 1.95ஜிகாஹெர்ட்ஸ் + 1.45ஜிகாஹெர்ட்ஸ் எஸ்ஒசி
செயலியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை
அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு வசதி
சாம்சங் கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போன் மாடல் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாககொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

இரண்டு கேமராக்கள்
சாம்சங் கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி + 2எம்பி என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

3000எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட்,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications