குவாண்டம் சிப் வசதியுடன் அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது, அந்தவகையில் இந்நிறுவனம் தென் கொரியாவை சேர்ந்த எஸ்கே டெலிகாம் நிறுவனத்துடன் இணைந்து கேலக்ஸி ஏ குவாண்டம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக குவாண்டம் ரேண்டம் நம்பர் ஜெனரேஷன் சிப்செட் கொண்ட உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும்.

சுருக்கமா சொல்லவேண்டும் என்றால், இது உலகின் மிகவும் சிப்செட் ஆகும். இந்த சிப்செட் இருப்பதால் பயனர்கள் கொரியநாட்டு ஆன்லைன் பணபரிவத்தனை சேவைகளை மிகவும் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும். மேலும் இந்த சிப்செட் குவாண்டம் க்ரிப்டோ தொழில்நுட்பத்தை சார்ந்து இயங்குகிறது. இதனுடன் ஸ்மார்ட்போன் விவரங்களை பாதுகாப்பாக வைக்கவும் உதவும்.

6.7 இன்ச் ஃபுல் ஹெச்டி AMOLED பிளஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே வசதியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ குவாண்டம் ஸ்மார்ட்போன்,மேலும் 1080x2400 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மர்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 980 பிராசஸர் உடன் மாலி-G76 MP5GPU ஆதரவு இருப்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 10 மற்றும் சாம்சங் ஒன் யுஐ 2.0 இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ குவாண்டம் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா+ 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் +5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

சாம்சங் கேலக்ஸி ஏ குவாண்டம் ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலைஇருக்காது. மேலும் 25வாட் வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இன் டிஸ்பிளே கைரேகை சென்சார் மற்றும் சாம்சங் பே போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

கேலக்ஸி ஏ குவாண்டம் ஸ்மார்ட்போன் ஆனது ப்ரிசம் கியூப் பிளாக், ப்ரிசம் கியூப் சில்வர் மற்றும் ப்ரிசம் கியூப் புளூ நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். இந்த சாதனத்தின் விலை 649,000 வொன் இந்திய மதிப்பில் ரூ.39,860-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








