2019ல் வருகிறது மடிக்கும் சாம்சங் ஸ்மார்ட் போன் .!
சாம்சங் நிறுவனத்தின் மடிக்கும் ஸ்மார்ட்போன் 7இன்ச் டிஸ்பிளேவுடன் 2019ம் ஆண்டுக்குள் வெளியிடுவதாக அறிவித்துள்ளது. சாம்சங் மடி ஸ்மார்ட் போனை விரித்தால், 7 இன்ச் டிஸ்பிளேவுடன் காட்சியளிக்கும்.
இந்திய தொலைபேசி சந்தை உலக அளவில் தனக்கென்று தனி இடத்தை பெற்றுள்ளது. மேலும் நவீன மற்றும் வளர்ந்து வரும் இந்தியாவில் வர்த்தம், விளையாட்டு, தகவல் தொடர்பு, பொது, தனியார் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது.

இன்று அனைத்து தரப்பு மக்களும் செல்போன் இல்லாமல் இயங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய செல்போன் சந்தையில் நுகர்வோர்கள் அதிகமாக உள்ளனர். இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களும் இந்திய சந்தையை குறிவைத்து களம் இறங்கி வருகின்றனர். இதனால் செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் இந்தியாவில் முன்னணியில் உள்ளது. மேலும் பல்வேறு விதமான செல்போன்களை வெளியிட்டு வருகிறது. சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்புகள் நுகர்வோர்களை ஈர்த்து வருகிறது.

சாம்சங் நிறுவனத்தின் மடிக்கும் ஸ்மார்ட்போன் 7இன்ச் டிஸ்பிளேவுடன் 2019ம் ஆண்டுக்குள் வெளியிடுவதாக அறிவித்துள்ளது. சாம்சங் மடி ஸ்மார்ட் போனை விரித்தால், 7 இன்ச் டிஸ்பிளேவுடன் காட்சியளிக்கும். இது மணி பர்சை போல் தோற்றம் கொண்டது. அடுத்தாண்டு பிப்ரவரியில் நடக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரசின் போது, இந்த போன் அறிமுகப்படுத்தப்படும் என்று தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications