புதிய ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்ட சாம்சங் மொபைல்கள்: ஒப்பீடு

ஃபோக்கஸ் எஸ் மற்றும் ஃபோக்கஸ் ஃப்ளாஷ் என்ற இரண்டு புதிய மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல்கள் வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படும், விண்டோஸ் மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது.
ஸ்னாப்டிராகனின் இரண்டாவது ஜென்ரேஷனான எஸ்-2 பிராசஸர் இந்த இரண்டு மொபைல்களிலுமே பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிராசஸர் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தினை கொடுக்க வல்லது.
ஃபோக்கஸ் எஸ் மொபைல், சாம்சங் கேலக்ஸி எஸ் II மொபைலைவிடவும் குறைந்த தடிமனை கொண்டது. இதனால் பார்ப்பதற்கு, கண்கவரும் வகையில் இதன் வடிவம் உள்ளது. 4.3 சூப்பர் அமோல்டு ப்ளஸ் திரையை கொண்டுள்ளது.
ஃபோக்கஸ் எஸ் மொபைலில் 8 மெகா பிக்ஸல் கொண்ட கேமராவும், 1.3 மெகா பிக்ஸல் கொண்ட முகப்புக் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த முகப்புக் கேமராவின் மூலம் வீடியோ கான்ஃபிரன்ஸ் போன்ற வசதியினைப் பெற முடியம்.
இது 3.7 சூப்பர் ஆமோல்டு திரை வசதி கொண்டது. இதன் 5 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம், அழகான புகைப்படத்தை, இன்னும் அழகாக எடுக்க முடியும். வீடியோ ரெக்கார்டிங் வசதியும் இதில் உள்ளது.
ஃபோக்கஸ் எஸ் மொபைலில் உள்ள வசதியியை விடவும் ஃபோக்கஸ் ஃப்ளாஷ் மொபைலில் உள்ள வசதி சற்று குறைவுதான்.
ஆனால் இந்த இரண்டு மொபைல்களிலுமே புதிய ஸ்னாப்டிராகன் எஸ்-2 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளதால் அதி நவீன வசதியினை நிச்சயம் பெற முடியம். இந்த மொபைல்களை வாங்க இது ஒரு சிறந்த காரணம் என்று கூறலாம்.


Click it and Unblock the Notifications