Home
Mobile

ஓஹோ போட்டியா.. நடுவுல இந்த கௌசிக் வந்தா? நியாயமான விலையில் Flip போனை களமிறக்கிய Oppo!

ஒப்போ நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Oppo Find N2 Flip இன்று அறிமுகம் செய்துள்ளது. சீனாவில் அதன் INNO Day நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போனை ஒப்போ அறிமுகம் செய்துள்ளது. Find N என்பது ஒப்போவின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இதுவாகும். இந்த ஸ்மார்ட்போனை மேல் இருந்து கீழாக இரண்டாக மடித்துக் கொள்ளலாம்.

ஓஹோ போட்டியா.. நியாயமான விலையில் Flip  போனை களமிறக்கிய Oppo!

ஃப்ளிப் ஸ்மார்ட்போன் பிரிவில் தனியாக சந்தையில் இருக்கும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப் போனுக்கு எதிராக இது போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே மாதிரியாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறோமே என்று புலம்பி தவித்தவர்களுக்கு வரப்பிரசாதமாக அறிமுகமானது தான் ஃபோல்டபிள் மற்றும் ஃப்ளிப் ஸ்மார்ட்போன்.

சாம்சங் நிறுவனத்தின் ஃப்ளிப் ஸ்மார்ட்போன் தனியாக சந்தையில் செயல்பட்டு வந்த நேரத்தில் இதற்கு போட்டியாக ஒப்போ ஃபைன்ட் என் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

Oppo Find N2 Flip ஸ்மார்ட்போனானது வளைந்த விளிம்பு பேனல்கள் மற்றும் தட்டையான மெட்டாலிக் கண்ணாடி வடிவமைப்புகளைக் கொண்டிருக்கிறது. இதில் பெரிய 2.26 இன்ச் ஓஎல்இடி கவர் டிஸ்ப்ளேவும் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் எடை 191 கிராம் எடை கொண்டதாக இருக்கிறது.

ஃப்ளிப் ஓபன் செய்யும் போதுல்ல இதன் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் முழு எச்டி+ தெளிவுத்திறன் உடன் கூடிய பெரிய அளவிலான 6.8 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் Oppo Find N2 Flip ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 9000+ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

இந்த சிப்செட் ஆனது 4என்எம் ஃபேப்ரிகேஷன் செயல்முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ஃப்ளிப் ஸ்மார்ட்போனானது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

Oppo Find N2 Flip ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ராவைட் ஷூட்டர் ஆதரவு இருக்கிறது. செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என இந்த ஸ்மார்ட்போனில் துளை பஞ்ச் கட்அவுட் உடன் 32 எம்பி கேமரா இடம்பெற்றிருக்கிறது.

ஒப்போவின் இந்த ஸ்மார்ட்போனானது அதன் மேம்பட்ட MariSilicon X சிப் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4300 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இதை சார்ஜ் செய்வதற்கு 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

Oppo Find N2 Flip: விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Oppo Find N2 Flip ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 5,999 (தோராயமாக ரூ.71,200) ஆகவும் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 6,999 (தோராயமாக ரூ.83,100) ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

ஓஹோ போட்டியா.. நியாயமான விலையில் Flip  போனை களமிறக்கிய Oppo!

இந்த ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றாலும் 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் Oppo Find N2 Flip உலகளவில் வெளியிடப்படும் என நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது பிளாக், பர்பிள் மற்றும் கோல்ட் வண்ண விருப்பத்தில் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவை பொறுத்த வரை இந்த Oppo Find N2 Flip ஸ்மார்ட்போனானது ரூ.80,000 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங்கிற்கு மாற்றாக சிறந்த ஃப்ளிப் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என திட்டமிட்டிருந்தால் இன்னும் சிறிது காலம் காத்திருந்தால் Oppo Find N2 Flip ஃப்ளிப் போனை வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Samsung Flip Phone Competition Ready: Oppo Find N2 Flip Launched With Curved Edge Panels, 16GB RAM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X