Home
Mobile

என்னது இந்த போன்லாம் பாதி விலைக்கு கிடைக்குதா! செஞ்சிவிட்ட Samsung.. S, A, M, F-சீரீஸ்னு 1 விடாம விலைகுறைப்பு!

சாம்சங் நிறுவனம் தனது பண்டிகை கால சிறப்பு விற்பனை சலுகைகளை (Samsung Festive Sale 2025 Offers) அறிவித்து உள்ளது. இதன் கீழ் பிளாக்ஷிப், மிட்ரேன்ஜ் மற்றும் பட்ஜெட் பிரிவின் கீழ் உள்ள பல கேலக்ஸி ஸ்மார்ட்போன்களின் விலைகள் குறைக்கப்பட்டு உள்ளது.

இதில் சில ஸ்மார்ட்போன்கள் - அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இவ்வளவு குறைவான விலைக்கு விற்கப்பட்டதே இல்லை என்றும் சாம்சங் கூறுகிறது. சாம்சங்கின் இந்த பண்டிகை கால சலுகைகள் ஆனது வருகிற செப்டம்பர் 22, 2025 முதல் இந்தியா முழுவதும் கிடைக்கும். என்னென்ன ஸ்மார்ட்போன்கள் எவ்வளவு தள்ளுபடியை பெற்று, என்ன விலைக்கு வாங்க கிடைக்கும் என்கிற விவரங்கள் இதோ:

செஞ்சிவிட்ட Samsung.. S, A, M, F-சீரீஸ்னு 1 விடாம விலைகுறைப்பு!

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பிரீமியம் ஸ்மார்ட்போனான கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது ரூ.1,29,999 க்கு பதிலாக ரூ.71,999 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.39,999 ஆக விலை குறைக்கப்படும். நினைவூட்டும் வண்ணம் இந்த மாடலின் அசல் விலை ரூ.74,999 ஆகும்.

இதற்கிடையில் பேன் எடிஷன் ஆன கேலக்ஸி எஸ்24 எப்இ மாடல் ஆனது அதன் வெளியீட்டு விலையில் கிட்டத்தட்ட பாதியாக குறைந்து ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கும். சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸிலும் குறிப்பிடத்தக்க தள்ளுபடிகள் கிடைக்கும். கேலக்ஸி ஏ55 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.39,999 க்கு பதிலாக ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல கேலக்ஸி ஏ35 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.30,999 இல் இருந்து ரூ.17,999 ஆக குறைக்கப்படும்.

ஒருவேளை நீங்கள் பட்ஜெட் விலை மாடல்களை தேடினால் - கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.19,999 க்கு பதிலாக ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல கேலக்ஸி எம்16 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.10,499 க்கும் , கேலக்ஸி எம்06 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.7,499 க்கும் வாங்க கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி எப் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் மீதான தள்ளுபடியை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.13,999 என்கிற விலையில் வாங்க கிடைக்கும். கடைசியாக சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.7,499 க்கு வாங்க கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.7 இன்ச் FHD பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே
- சாம்சங்கின் இன்-ஹவுஸ் எக்சினோஸ் 1380 சிப்செட்
- கூகுள் ஜெமினி அடிப்படையிலான பல்வேறு ஏஐ அம்சங்கள்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா
- 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ்
- 2MP மேக்ரோ சென்சார்
- 13MP செல்பீ கேமரா
- 25W யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங்கை ஆதரவு உடனான 5,000mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.7-இன்ச் எப்எச்டி பிளஸ் (1080 x 2340 பிக்சல்ஸ்) சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்
- 8ஜிபி வரை ரேம்
- அதிகபட்சமாக 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

- 50எம்பி + 5எம்பி + 2எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்
- 13எம்பி செல்பீ கேமரா
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார்
- சாம்சங் நாக்ஸ் வால்ட் அம்சம்
- டேப் அண்ட் பே ஆதரவு கொண்ட சாம்சங் வேலட்
- சாம்சங் குவிக் ஷேர்
- 25W ஃபாஸ்ட் சார்ஜிங் உடனான 5000mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Festive Sale 2025 From Sep 22 Discount on Galaxy S24 A35 M36 F06 5G Smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X