வந்துடுச்சு.. இந்த Samsung போனுக்கு பல பேர் வெயிடிங்.. 2 50MP கேமரா, 120Hz டிஸ்பிளே, IP67 ரேட்டிங், 5G ஆதரவு!
சாம்சங் (Samsung) நிறுவனத்தின் கீழ் வெளியாகும் எம்-சீரீஸ் (M-Series) ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமும் உள்ளது, கூடவே தொடர்ந்து எம்-சீரீஸ் மாடல்களை வாங்கும் விசுவாசமான வாடிக்கையாளர்களும் உள்ளனர். இவர்கள் அனைவருமே எதிர்பார்த்த ஒரு 2024 மாடல் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!
அதென்ன மாடல்? சாம்சங் நிறுவனம் அதன் எம்-சீரிஸின் கீழ் கேலக்ஸி எம்55 5ஜி (Galaxy M55 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இது கேலக்ஸி ஏ55 (Galaxy A55) மாடலில் உள்ள அதே அம்சங்களைத்தான் பேக் செய்யும் என்று கூறப்பட்டது. ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? சாம்சங் கேலக்ஸி எம்55 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பஞ்ச்-ஹோல் டிசைன் (Punch-hole Design) உடனான 6.7 இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை (AMOLED Display) கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளே ஃபுல் எச்டி பிளஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் இன்-ஸ்கிரீன் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் ஆதரிக்கிறது.
ஆண்ட்ராய்டு 14 (Android 14) ஆப்ரேட்டிங் சிஸ்டம் அடிப்படையிலான யுஐ 6.1 ஓஎஸ் (UI 6.1 OS) உடன் வரும் சாம்சங் கேலக்ஸி எம்55 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட்டை (Snapdragon 7 Gen 1 Chipset) பேக் செய்கிறது. இது 8ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் ஓஐஎஸ் ஆதரவு (OIS Support) உடனான 50 மெகாபிக்சல் மெயின் கேமரா + அல்ட்ரா-வைட் லென்ஸ் உடனான 8 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான 50எம்பி செல்பீ கேமரா உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எம்55 5ஜி மாடலானது 25W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. டூயல் ஸ்பீக்கர்களை கொண்டுள்ள இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி67 ரேட்டிங்கை (IP67 Rating) பெற்றுள்ளது; இது பாலிகார்பனேட் கட்டமைப்பை கொண்டுள்ளது.

என்ன விலை? சாம்சங் கேலக்ஸி எம்55 5ஜி மாடலானது பிரேசிலில் தோராயமாக ரூ.45,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் இது இந்தியாவிலும் அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால் 2024 ஏப்ரலில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் (April 2024 Upcoming Smartphones List) இதுவும் உள்ளது.
ஏப்ரல் 2024-ல் அறிமுகமாகும் மற்ற ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை.. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4) மாடலானது ஏப்ரல் 1 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் இந்திய விலை நிர்ணயம் ரூ.25,000 க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அடுத்ததாக ரியல்மி 12எக்ஸ் 5ஜி (Realme 12X 5G) ஸ்மார்ட்போன் ஏப்ரல் 2 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ரியல்மி நிறுவனம் இதை "என்ட்ரி-லெவல் 5ஜி கில்லர்" (Entry-level 5G Killer) என்று கூறுவதோடு மட்டுமில்லாமல், இதன் இந்திய விலை நிர்ணயம் ரூ.12,000 க்குள் இருக்கும் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
அடுத்ததாக மோட்டோரோலா நிறுவனத்தின் இந்த ப்ரீமியம் ஸ்மார்ட்போன் ஆன மோட்டோ எட்ஜ் 50 ப்ரோ (Moto Edge 50 Pro) வருகிற ஏப்ரல் 3 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் இந்திய விலை நிர்ணயம் ரூ.60,000 க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கடைசியாக இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி சீரீஸ் (Infinix Note 40 Pro 5G Series) ஸ்மார்ட்போன்களும் கூட 2024 ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சாம்சங் கேலக்ஸி எம்55 5ஜி மாடலை போலவே, இந்த சீரீஸின் சரியான வெளியீட்டு தேதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications








