Home
Mobile

3 பழைய Samsung போன்களுக்கு சாஃப்ட்வேர் அப்டேட் நிறுத்தம்!

நீங்கள் ஒரு சாம்சங் ஸ்மார்ட்போன் பயனர் என்றால்.. அதிலும் குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமான சாம்சங் மாடல்களை இன்னமும் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால்.. சாம்சங் நிறுவனமானது 3 பழைய ஸ்மார்ட்போன்களின் "கதையை முடித்துள்ளது" என்பதை பற்றி நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். அந்த 3 ஸ்மார்ட்போன்களின் மாடல் பெயர் என்ன? "கதை முடிந்தது" என்றால் என்ன அர்த்தம்? அப்போது பழைய சாம்சங் ஸ்மார்ட்போனை வைத்து இருப்பவர்கள் புதிய ஸ்மார்ட்போனை வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதா? இதோ விவரங்கள்:

சாம்சங் நிறுவனம் 3 பழைய ஸ்மார்ட்போன்களின் கதையை முடித்துள்ளது என்றால் என்ன அர்த்தம்? அதாவது குறிப்பிட்ட 3 ஸ்மார்ட்போன்களுக்கு சாஃப்ட்வேர் அப்டேட்களை வழங்குவதை சாம்சங் நிறுவனம் நிறுத்தியுள்ளது என்று அர்த்தம். அந்த 3 ஸ்மார்ட்போன்களின் சாஃப்ட்வேர் அப்டேட் சுழற்சி முடிவை எட்டியுள்ளன. ஆக இனிமேல் அவைகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் வராது என்று அர்த்தம்.

3 பழைய Samsung போன்களுக்கு சாஃப்ட்வேர் அப்டேட் நிறுத்தம்!

அதென்ன மாடல்கள்? அவைகள் சாம்சங் கேலக்ஸி ஏ51 5ஜி (Samsung Galaxy A51 5G), சாம்சங் கேலக்ஸி ஏ41 (Samsung Galaxy A41) மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்01 (Samsung Galaxy M01) மாடல்கள் ஆகும். இந்த 3 சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கும் இனிமேல் சாஃப்ட்வேர் அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட் அனுப்பப்படாது / கிடைக்காது.

நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி ஏ51 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஒன் யுஐ 2.0 உடன் அறிமுகமானது. இது மூன்று மேஜர் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களை பெற்று, தற்போது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ கொண்டு இயங்குகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ51 5ஜி ஸ்மார்ட்போனை போலல்லாமல், சாம்சங் கேலக்ஸி ஏ41 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்01 ஸ்மாட்போன்கள் ஆனது 2 மேஜர் அப்டேட்களையே பெற்றுள்ளன. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த நேரத்தில் இவைகள் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ஓஎஸ் உடன் வந்தன. இப்போது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-க்கு அப்கிரேட் ஆகியுள்ளன.

இந்த 3 ஸ்மார்ட்போன்களுக்கும் இனி சாஃப்ட்வேர் அப்டேட் கிடைக்காது மற்றும் செக்யூரிட்டி அப்டேட் கூட வராது என்பதால்.. அந்தந்த ஸ்மார்ட்போன்களின் பெர்பார்மென்ஸ் சற்றே குறையலாம். முடிந்தவர்கள் புதிய ஸ்மார்ட்போனிற்கு அப்கிரேட் ஆகலாம்; உடனே அப்கிரேட் ஆக முடியாதவர்கள் பழைய சாம்சங் ஸ்மார்ட்போன்களையே தொடர்ந்து பயன்படுத்தலாம் - அதில் எந்த தவறும் இல்லை!

சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி மாடலின் முக்கிய அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5-இன்ச் FHD+ சூப்பர் AMOLED டிஸ்பிளே, 8ஜிபி வரையிலான ரேம், ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 1280 சிப்செட், 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், 50எம்பி + 8எம்பி + 2எம்பி ரியர் கேமரா, 13எம்பி செல்பீ கேமரா, 25W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000எம்ஏஎச் பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

சாம்சங் பற்றிய மற்ற செய்திகளை பொறுத்தவரை.. சாம்சங் இந்தியா (Samsung India) நிறுவனமானது 2024 ஜூன் 30 ஆம் தேதி வரை தொடரும் சாம்சங் பிக் டிவி டேஸ் சேல் (Samsung Big TV Days Sale) என்கிற சிறப்பு விற்பனையை அறிவித்து உள்ளது. இந்த சிறப்பு விற்பனையின்கீழ் அல்ட்ரா-பிரீமியம் நியோ கியூஎல்இடி, ஓஎல்இடி மற்றும் கிரிஸ்டல் 4கே யுஎச்டி டிவிகள் உட்பட, சாம்சங்கின் பல ஸ்மார்ட் டிவிகள் மீது சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங்கின் கூற்றுப்படி, பயனர்களின் பொழுதுபோக்கு அனுபவத்தை மேம்படுத்தவும், டி20 கிரிக்கெட் உலக கோப்பைக்காகவுமே இந்த 'பிக் டிவி டேஸ்' சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung end software support to 3 old smartphones Galaxy A51 5G Galaxy A41 Galaxy M01
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X