Home
Mobile

சந்தையில் தடம் பதித்த புதிய சாம்சங் பட்ஜெட் மொபைல்!

By Super
சந்தையில் தடம் பதித்த புதிய சாம்சங் பட்ஜெட் மொபைல்!

வாழ்க்கைக்கு அத்தியாவசியமான எது வேண்டுமானாலும் இல்லாமல் இன்றைய மனிதர்களை பார்க்கலாம். ஆனால் கையில் மொபைல் இல்லாமல் ஒருவரை பார்ப்பது சாத்தியமில்லாத ஒன்றாகிவிட்டது. காரணம் மொபைல்களின் தேவை நாளுக்கு நாள் பெருகுவதுதான். தொழில் நுட்ப பயன்பாடுகள் அதிகவதால் மொபைல் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களின் பயன்பாடுகளும் பெருகிவிட்டது.

இதனால், ஏராளமான புதிய மொபைல்போன்கள் மாடல்கள் மார்க்கெட்டில் நித்தமும் அடியெடுத்து வைத்து வருகின்றன. இந்த வரிசையில் புது புது மொபைல்களை கொடுத்த சாம்சங் நிறுவனம் தற்போது இ-2600 என்ற புதிய பட்ஜெட் மொபைலை சர்வதேச சந்தையில் வெளியிட்டு இருக்கிறது.

இந்த இ-2600 மொபைலில் 2.4 இஞ்ச் திரை வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இது டிஎப்டி கியூவிஜிஏ திரை வசதி கொண்டுள்ளது. 2.0 மெகா பிக்ஸல் கேமரா இதில் உள்ளதால் 1600 X 1200 பிக்ஸல் துல்லியும் இந்த

மொபைல் மூலம் பெறலாம்.

அனைவரிடமும் மொபைல் என்ற மின்னனு சாதனம் இருப்பதால் புகைப்படமும், வீடியோவும் ஒரு பெரிய விஷயமாக இருப்பதில்லை. 800 எம்ஏஎச் ரிமூவபுல் லித்தியம்-அயான் பேட்டரி உள்ளதால் இதில் டாக் டைம் மற்றும் ஸ்மடான்-பை டைமையும் கொடுக்கும்.

பொழுதை இனிமையாக கழிப்பதற்கு எம்எப் ரேடியோவையும் கொண்டிருக்கிறது. இன்டர்நெட் வசதி பற்றிய கவலையும் இதில் இல்லை. இந்த மொபைலில் ஜிபிஆர்எஸ், எட்ஜ் போன்ற தொழில் நுட்பங்களின் துணையும் உள்ளது.

இத்தனை வசதிகளை அளிக்கும் இ-2600 மொபைல் ரூ.2,500 விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X