சாம்சங் வழங்கும் புதிய பட்ஜெட் மொபைல்!

Posted By: Staff
சாம்சங் வழங்கும் புதிய பட்ஜெட் மொபைல்!

சமீபமாக சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் பற்றியே கேட்டு கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு, இங்கே ஒரு பட்ஜெட் மொபைல் பற்றிய விவரம் காத்திருக்கிறது.

ஜிடி-இ-1260பி என்ற இந்த மொபைல், இதற்கு முன்பு வெளியான ஜிடி-இ2220 என்ற மாடலை போன்ற ஒற்றுமை கொண்டதாக இருக்கும்.

2 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த மொபைல் 160 X 128 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும். இந்த மொபைல் கியூவர்டி கீப்பேட் வடிவமைப்பினை வழங்கும். ஜிஎஸ்எம் தொழில் நுட்பம் கொண்ட இந்த மொபைல் 800 எம்ஏஎச் பேட்டரி வசதியினையும் கொடுக்கும்.

இந்த மொபைலின் எடை 92 கிராம் எடை கொண்டதாக இருக்கும். இந்த சாம்சங் ஜிடி-இ-1260 மொபைலின் அதிக தொழில் நுட்ப விவரம் இதில் ஏதும் கொடுக்கப்படவில்லை.

ஆனால் கூடிய விரவில் இந்த மொபைல் இந்தியாவில் வெளியாவது பற்றியும், இதன் தொழில் நுட்பம் மற்றும் விலை

விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த மொபைல் ரூ. 5,000 ஒட்டிய விலை கொண்டதாக இருக்கலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot