Just In
- 9 hrs ago
லுமிஃபோர்ட் கோமியூசிக் BT12 ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்: விலை என்ன தெரியுமா?
- 11 hrs ago
ஆஃப்லைன் தளத்தில் விற்பனைக்கு வந்த சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன்.!
- 12 hrs ago
இந்தியா: பட்ஜெட் விலையில் மூன்று ஜெபிஎல் வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் அறிமுகம்.!
- 1 day ago
மே 15-க்குள் இதை செய்ய வேண்டும்: மீண்டும் மீண்டும் நினைவூட்டும் வாட்ஸ்அப்!
Don't Miss
- News
கம்மி 'சீட்'.. நாம தான்யா காரணம்.. அவங்கள குறை சொல்லி யூஸ் இல்ல - ப.சிதம்பரம் சுளீர் பேச்சு
- Movies
ஓய்வின்றி உழைக்கிறேன்...தலைவிக்காக டப்பிங் வேலைகளை துவங்கிய கங்கனா
- Finance
எலான் மஸ்க் செம ஹேப்பி.. அடுத்த சில மாதங்களில் பிட்காயின் $75,000 தொடலாம்..!
- Sports
ஐபிஎல் 2021 தொடரோட தேதி அறிவிச்சாச்சு... சிஎஸ்கே போட்டிகளை பத்தி தெரிஞ்சுக்க வேணாமா?
- Automobiles
ரூ.4 லட்சத்தில் 650சிசி பைக்குகளை இந்தியா கொண்டுவரும் சிஎஃப் மோட்டோ!! கவாஸாகிக்கு தலைவலி ஆரம்பமாக போகுது!
- Lifestyle
ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையான மிகவும் முக்கியமான 5 வைட்டமின்கள்!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை!!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கேலக்ஸி எஸ்20 சீரிஸ் விற்பனை நிறுத்தம்: காரணம் என்ன?
சாம்சங் நிறுவனத்தின் அனைத்து ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டு வரும் ஒவ்வொரு சாதனமும் சிறந்த தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளன. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.

குறிப்பாக கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போனின் விலை ரூ.69,999 என துவங்குகிறது. புதிய பிளாக்ஷிப் சீரிஸ் வெளியீட்டை தொடர்ந்து
கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி எஸ்20 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களின் விற்பனையை சாம்சங் அவசர அவசரமாக நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

வெளிவந்த தகவலின்படி, கேலக்ஸி எஸ்20, எஸ்20 பிளஸ், எஸ்20 அல்ட்ரா போன்ற ஸ்மார்ட்போன் மாடல்கள் விற்று தீர்ந்துவிட்டதாக சாம்சங் இந்தியா, ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் சீனாவுக்கான அதிகாரப்பூர்வ வலைதளங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.
மேலும் பழைய கேலக்ஸி எஸ் சீரிஸ் மாடல்கள் குறைந்த விலையில் வாங்க திட்டமிட்டு இருந்தவர்களுக்கு இது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் அதிகாரப்பூர்வ தளத்தில் விற்று தீர்ந்த போதும், மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் புதுப்பிக்கப்பட்ட கேலக்ஸி எஸ்20 சீரிஸ் யூனிட்களை விற்பனை செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இப்போது சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கேலக்ஸி எஸ்20 எப்இ மாடல் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டு சில மாதங்கள் மட்டுமே நிறைவுற்று இருப்பதால் இதன் விற்பனை நடைபெறுவாக கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் குவாட் எச்டி பிளஸ் டைனமிக் AMOLED 2X டிஸ்பிளே வசதியுடன் 563ppi பிக்சல் density ஆதரவைக் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்20பிளஸ் ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் குவாட் எச்டி பிளஸ் டைனமிக் AMOLED 2X டிஸ்பிளே வசதியுடன் 525ppi பிக்சல் density ஆதரவைக் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6.9-இன்ச் குவாட் எச்டி பிளஸ் டைனமிக் AMOLED 2X டிஸ்பிளே வசதியுடன்
511ppi பிக்சல் density ஆதரவைக் கொண்டுள்ளது.
குறிப்பாக இந்த மூன்று ஸ்மாரட்போன்களும் எச்டிஆர் 10 + சான்றிதழுடன் 120 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன் புதுப்பிப்பு வீதத்துடன் வருகின்றன.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி லென்ஸ் + 12எம்பி வைட் ஆங்கிள் கேமரா + 64எம்பி
டெலிபோட்டோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 10எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி லென்ஸ் + 12எம்பி வைட் ஆங்கிள் கேமரா+ 64எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + டெப்த் விஷன் சென்சார் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 10எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா கேமரா ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 108எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 48எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + டெப்த் விஷன் சென்சார் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 40எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

கேலக்ஸி எஸ்20 சீரிஸ் சாதனங்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865சிப்செட் வசிதயுடன் 12GB of LPDDR5 ஆரவையும் கொண்டுள்ளது, மேலும் கேலக்ஸி எஸ்20 5ஜி சாதனம் ஆனது 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. இதுதவிர கேலக்ஸி எஸ்20பிளஸ் 5ஜி மற்றும் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா 5ஜி சாதனங்கள் 128ஜிபி/512 உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது,
மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

கேலக்ஸி எஸ்20 5ஜி ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி வசதி மற்றும் 25வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. கேலக்ஸி எஸ்20பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 4500எம்ஏஎச் பேட்டரி வசதி மற்றும் 25வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவைக் கொண்டுள்ளது.கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி வசதி மற்றும் 45வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவைக் கொண்டுள்ளது.
இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது, மேலும் ஜி.பி.எஸ்., கலிலியோ, க்ளோனாஸ், பீடோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளன இந்த மூன்று
கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்கள்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190