5 சாம்சங் ஸ்மார்ட்போன்களின் மீது ரூ.5000/- வரை தள்ளுபடி; என்ஜாய்.!
பிரபல இ-காமர்ஸ் தளமான அமேசான், அதன் சாம்சங் டேஸ் விற்பனையை அறிவித்துள்ளது.
பிரபல இ-காமர்ஸ் தளமான அமேசான், அதன் சாம்சங் டேஸ் விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனையானது நேற்று (மே 28 ஆம் தேதி) தொடங்கி மே 31 வரை நடக்கிறது. இதில் ஸ்மார்ட்போன்கள் உட்பட சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் கடிகாரங்கள் மற்றும் கேஜெக்ட் பாகங்கள் ஆகியவைகள் தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கும்.

எனவே, நீங்கள் ஒரு சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்க காத்திருந்தால், இதுதான் சரியான வாய்ப்பாகும், சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு என்னென்ன விலைகுறைப்பு.? என்னென்ன தள்ளுபடி.? அவைகளின் அசல் விலை என்ன.? எக்ஸ்சேன்ஜ் மதிப்பிற்கான வரையறை என்ன.? என்பதை விரிவாக காண்போம்.

சாம்சங் கேலக்ஸி ஆன் 7 ப்ரைம்
இந்த விற்பனையில், சமீபத்தில் தொடங்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஆன் 7 பிரைம் மீது ரூ.2,000/- என்கிற அளவிலான தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது ரூ.14,990/-க்கு பதிலாக ரூ.12,990/-க்கு வாங்க கிடைக்கும். உடன் ரூ.11,522/- வரையிலான எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பும், ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் கூடுதல் ரூ.2,000/- கேஷ்பேக் வாய்ப்பும் மற்றும் மாதம் ரூ.681/- முதல் தொடங்கும் இஎம்ஐ வாய்ப்பும் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ
மேலும் நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ மீது ரூ.2,500/- தள்ளுபடி கிடைக்கிறது. ஆக, இதை ரூ.9,490/-க்கு பதிலாக ரூ.6,990/-க்கு வாங்கலாம். உடன் ரூ.6,290 வரையிலான எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பும் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஆன்5 ப்ரோ
சாம்சங் கேலக்ஸி ஆன் 'தொடரின்' இன்னொரு ஸ்மார்ட்போன் மீதும் ரூ.2,000/- என்கிற தள்ளுபடி கிடைக்கிறது. அது சாம்சங் கேலக்ஸி ஆன்5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆகும். ஆக இதை ரூ.5,990/-க்கு வாங்கலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ.5,350/- வரையிலான எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பும் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ8 ப்ளஸ்
பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி மிட்-ரேன்ஜ் பிரீமியம் ஸ்மார்ட்போன்களும் இந்த விற்பனையின் கீழ் வாங்க கிடைக்கும். அதில் கேலக்ஸி ஏ8+ ஸ்மார்ட்போனும் அடக்கம். ரூ.41,990/- என்று பட்டியலிடப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ.11,910/- என்கிற தள்ளுபடி கிடைக்கிறது. ஆக இதை ரூ.29,990/-க்கு வாங்கலாம். உடன் ரூ.13,050/- வரையிலான எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பும் கிடைக்கிறது. சிட்டிபாங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் கொள்முதல் செய்யும் பயனர்களுக்கு, கூடுதலாக ரூ.2,500/- கேஷ்பேக் வாய்ப்பும் கிடைக்கும்.

கேலக்ஸி ஏ6 ப்ளஸ்
மற்றொரு புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி ஏ6+ மீட்டும் தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.28,000/- என்கிற விலை நிர்ணயம் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ.2,000/- தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.25,990/-க்கு வாங்க கிடைக்கும். ஐசிஐசிஐ கிரெடிட் கார்ட் வைத்திருந்தால், இஎம்ஐ பரிவர்த்தனைகளில் ரூ.3,000/- கூடுதல் கெஸ்பேக் கிடைக்கும். உடன் இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ.15,050/- என்கிற எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications