TRENDING ON ONEINDIA
-
இன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா.. பேடியுடன் பேச்சு
-
ரூ.15 லட்சம் அல்ல... இந்தியர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்
-
தயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்
-
கிருஷ்ணரின் கையில் இருக்கும் மகிமை வாய்ந்த பாஞ்சன்ய சங்கு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா?
-
பாகிஸ்தான் இணையத்தை அதிரடியாக முடக்கி தெறிக்கவிட்ட ஹேக்கர்கள்.!
-
இம்ரான் கான் வாயைத் திறந்து பேசமாட்டாரா? எதிர்ப்பு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் மைதானங்கள்!
-
பாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்
-
கோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான்! இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்...
இதில், மல்டிமீடியா அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள சாம்சங்கின் டார்ட் மற்றும் எச்டிசியின் சென்சேஷன் போன்களின் சிறப்பம்சங்களை காணலாம்.
சாம்சங் டார்ட் ஆன்ட்ராய்டு ப்ரேயோ 2.2 வெர்ஷனுடன் வந்துள்ளது. இன்டர்நெட்டில் அதிவேகமான பிரவுசிங்கையும் தருகிறது. எச்டிசியின் சென்சேஷன் ஜிஞ்சர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வந்துள்ளது.
சாம்சங் டார்ட் 3.14 இஞ்ச் டச் ஸ்கிரீனுடனும், எச்டிசி சென்சேஷன் 4.3 இஞ்ச் டச் ஸ்கிரீனுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பேட்டரியுடன் சேர்த்து பார்க்கும்போது சென்சேஷன் எடை கூடுதலாக இருக்கிறது. சென்சேஷன் 5.22 அவுன்ஸ் எடையிலும், டார்ட் 3.8 அவுன்ஸ் எடையும் கொண்டதாக இருக்கிறது.
எச்டிசியின் சென்சேஷன் அனைத்து மல்டிமீடியா அம்சங்களிலும் சிறப்பாக இருக்கிறது. ஹைடெபினிஷன் ஸ்கிரீன், எஸ்ஆர்எஸ் ஒயருடன் கூடிய ஹெட்போன், டிஎல்என்ஏ தொழில்நுட்பத்துடன் கூடிய வயர்லெஸ் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. அனைத்து மீடியா பார்மெட்டுகளிலும் இசை கேட்டு மகிழலாம்.
அதேவேளை, சாம்சங் டார்ட்டில், சென்சேஷனில் உள்ளதுபோன்ற உயரிய மல்டிமீடியா வசதிகள் இல்லை. மியூசிக் பிளேயர் மற்றும் வீடியோ பிளேயர்களை மட்டும் பெற்றுள்ளது. மேலும், கூடுதல் ஸ்பீக்கர்களை இணைத்துக்கொள்ள 3.5மிமீ விட்டம் கொண்ட ஆடியோ ஜாக் உள்ளது.
எச்டிசி சென்சேஷன் 1 ஜிபி இன்டர்னெல் மெமரியும், சாம்சங் டார்ட் 512 எம்பி சேமிப்பு திறன் மற்றும் 2 ஜிபி கூடுதல் மெமரி கார்டுடன் வருகிறது. டார்ட்டில் 32 ஜிபி வரை கூடுதல் மெமரி கார்டை பொருத்தலாம்.
டார்ட்டில் 3 எம்பி கேமராவும், சென்சேஷனில் ஆட்டோ எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகா பிக்செல் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளன. சென்சேஷனில் முகப்பு கேமராவும் உள்ளது.
சென்சேஷனில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செல்லும் வசதியும், டார்ட் கூகுள் நெட்வொர்க் வசதியும் கொண்டுள்ளன. இரண்டு போன்களும் யூஎஸ்பி மற்றும் WLAN கனெக்ட்டிவிட்டி வசதிகளையும் கொண்டுள்ளன.
சென்சேஷனில் 1520mAh பேட்டரியும், டார்ட்டில் 1200mAh பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு போன்களும் ஜிபிஆர்எஸ், 3ஜி, எட்ஜ் உள்ளிட்ட இணைப்புகளை கொடுக்கின்றன.
இரண்டு போன்களில் சென்சேஷனில் வசதிகள் கூடுதலாக தெரிகின்றன. ஆனால், விலையை வைத்து ஒப்பிட்டு பார்க்கும்போது டார்ட் தேர்வாகிறது. ஆம், சென்சேஷன் விலையில் பாதி விலைதான் டார்ட். எச்டிசியின் சென்சேஷன் ரூ.30,999 விலையிலும், சாம்சங் டார்ட் ரூ.16,000 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.