2 சாம்சங் கேலக்ஸி கருவிகளுக்கு முறையே ரூ.3000 & ரூ.1000/- விலைகுறைப்பு.!

கேலக்ஸி ஜே7 ப்ரைம் ஸ்மார்ட்போனிற்கும் மற்றொரு ஜே தொடர் கருவியான சாம்சங் கேலக்ஸி ஜே7 நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனிற்கும் தற்போது விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

|

முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சாம்சங் நிறுவனம் கடந்த மே மாதத்தில், இந்தியாவில் அதன் ஜே தொடர் வரிசையிலான கேலக்ஸி ஜே7 ப்ரைம் மற்றும் ஜே5 ப்ரைம் ஆகிய இரண்டு கருவிகளின் புதிய சேமிப்பு மாதிரிகளை அறிமுகப்படுத்தியது.

2 சாம்சங் கேலக்ஸி கருவிகளுக்கு முறையே ரூ.3000 & ரூ.1000/- விலைகுறைப்பு

இக்கருவிகள் கடந்த அக்டோபர் 2016-இல் வெளியிடப்பட்ட அசல் கருவிகளான ஜே7 ப்ரைம் மற்றும் ஜே5 ப்ரைம் ஸ்மார்ட்போன்களின் அப்கிரேட் வெர்ஷன் என்பதும், நிறுவனத்தின் மிக சிறந்த விற்பனை பிரிவில் ஜே தொடர் மாதிரி முக்கிய பங்கு வகிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விலைக்குறைப்பு

விலைக்குறைப்பு

அந்த விற்பனை வேகத்தை தொடரும் ஒரு முயற்சியாக சாம்சங் நிறுவனம் புதிய விலை நிர்ணயத்தில், கேலக்ஸி ஜே7 ப்ரைம் மற்றும் ஜே5 ப்ரைம் ஸ்மார்ட்போன்களின் புதிய சேமிப்பு மாதிரிகளை வெளியிட்டது. அதிலொரு கருவியான கேலக்ஸி ஜே7 ப்ரைம் ஸ்மார்ட்போனிற்கும் மற்றொரு ஜே தொடர் கருவியான சாம்சங் கேலக்ஸி ஜே7 நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனிற்கும் தற்போது விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம்

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம்

விலைக்குறைப்பை பொறுத்தமட்டில், சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம் சாதனத்தின் 32 ஜிபி மாறுபாடானது ரூ3,000/- குறைக்கப்பட்டு இப்போது ரூ.13,900/-க்கு கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம் (32 ஜிபி) ஆனது ரூ.16,900/-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஜே7 நெஸ்க்ஸ்ட்

சாம்சங் கேலக்ஸி ஜே7 நெஸ்க்ஸ்ட்

மறுகையில் உள்ள, சாம்சங் கேலக்ஸி ஜே7 நெஸ்க்ஸ்ட் கருவிக்கு ரூ.1,000/- விலை குறைக்கப்பட்டு, இப்போது ரூ.10,490/-க்கு வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் இந்த ஆண்டு ஜூலை மாதம், கேலக்ஸி ஜே7 நெக்ஸ்ட் ஆனது ரூ.11,490/-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே தங்கம் மற்றும் கருப்பு நிற வகைகளில் வந்துள்ளன.

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம் அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம் அம்சங்கள்

உலோக வடிவமைப்பை கொண்ட சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம் அம்சங்களை பொறுத்தமட்டில், ஒரு 5.5 அங்குல 2.5டி கிளாஸ் டிஸ்பிளே (1920x1080 பிக்ஸல் தீர்மானம்) கொண்டுள்ளது அது கொரில்லா கிளாஸ் 4 கொண்டு பாதுகாக்கப்படுகின்றது.

சேமிப்பு

சேமிப்பு

மேலும் இக்கருவி 1.6ஜிஹாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது உடன் 256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி அட்டை கொண்டு விரிவாக்கக்கூடிய சேமிப்பு ஸ்லாட் உள்ளது.

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயக்க முறைமையின்கீழ் இயங்குகிறது. ஒரு கைரேகை ஸ்கேனரை வழங்குகிறது, அடகு கருவியின் ஹோம் பொத்தாநுங் ஒருங்கிணைக்கபட்டுள்ளது. ஒரு 3300எம்ஏச் பேட்டரி கொண்டு ச்கதியூட்டப்படுகின்றது.

சாம்சங் கேலக்ஸி ஜே7 நெஸ்க்ஸ்ட் அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி ஜே7 நெஸ்க்ஸ்ட் அம்சங்கள்

மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி ஜே7 நெக்ஸ்ட் ஆனதும் ஒரு உலோக உடல் வடிவமைப்பு கொண்ட 5.5 அங்குல எச்டி (720x1280 பிக்சல்) சூப்பர் அமோ எல்இடி டிஸ்பிளே கொண்டு வருகிறது. இது 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது.

பேட்டரி

பேட்டரி

மேலும் இக்கருவி 2 ஜிபி ரேம் ஜோடியாக 16 ஜிபி அளவிலான உள் நினைவகத்துடன் வருகிறது, மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவும் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயக்கமுறைமையின் கீழ் இயங்கும் இக்கருவி ஒரு 3,000எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது.

கேமரா

கேமரா

ஒளியியல் துறையை பொறுத்தமட்டில், சாம்சங் கேலக்ஸி ஜே7 நெக்ஸ்ட் ஆனது, எப் / 1.9 துளை கொண்ட ஒரு 13-மெகாபிக்சல் பினோரா கேமரா மற்றும் எப்/2.2 துளை உடனான ஒரு 5-மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

4ஜி வோல்ட்

4ஜி வோல்ட்

இணைப்பு விருப்பங்களை பொறுத்தமட்டில், 4ஜி வோல்ட், ப்ளூடூத், வைஃபை, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவைகளை ஆதரிக்கிறது. அளவீட்டில் 152.4 × 78.6 × 7.6 மிமீ உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung cuts prices for the Galaxy J7 Prime 32GB and Galaxy J7 Nxt smartphones. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X