சாம்சங் கான்கர் மற்றும் எல்ஜி ரெவலியூஷன் 4ஜி போன்கள் - ஒப்பீட்டு பார்வை

Posted By: Staff

சாம்சங் கான்கர் மற்றும் எல்ஜி ரெவலியூஷன் 4ஜி போன்கள் - ஒப்பீட்டு பார்வை
நாம் 3ஜி காலகட்டத்தில் இருப்பதால் மிக விரைவு டிவைஸ்களான புதிய 3ஜி/4ஜி வரவு கட்டாயமான ஒன்றாக இருக்கிறது. அதை நிறைவு செய்யும் விதமாக சாம்சங் கான்கர் 4ஜி மற்றும் எல்ஜி ரெவலியூஷன் 4ஜி வந்திருக்கின்றன.

பெயருக்கு ஏற்றார்போல் இரண்டு மொபைல்களுமே தொலைத்தொடர்புத் துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. 4ஜி காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் விதத்தில் அனைத்து நவீன வசதிகளையும் பெற்றுள்ளன.

சாம்சங் கான்கர் 4ஜின் பெரிய பலம் மிக விரைவாக செயல்படக்கூடிய ஆன்ட்ராய்டு ஜிஞ்சர்ப்ரீடில் ஆப்பரேட்டிங் சிஸ்டமும், 1ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் கொண்டுள்ளதாகும். இதன் அகன்ற 3.5 இன்ச் அளவுள்ள தொடுதிரை டிஸ்பிளே கவர்ச்சியாக இருக்கிறது.

3.2 மெகா பிக்ஸல் ரியர் கேமராவையும் 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவையும் கொண்டு பார்ப்பதற்கு பரவசத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. மேலும் கூகுள் தேடுபொறி தளம் மூலம் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்களை டவுன்லோடு செய்யும் வசதியையும் கொண்டுள்ளது.

எல்ஜி ரெவலியூஷன் 4ஜியில் வி2.3 அளவு அப்டேட் செய்யக்கூடிய அன்ட்ராட் ஓஎஸ் வி2.2 பெற்று வேகமாக செயல்படும் அளவிற்கு 1ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸரையும் கொண்டுள்ளது. அதுபோல் இணைப்புக்கு ப்ளூடூத் 3.0 மற்றும் வை-பை 802 வழங்குகிறது.

மேலும் 48 யுசர்இன்டர்பேஸ் அப்ளிகேஷன்களை வழங்குகிறது. மற்ற மொபைல்களில் இல்லாத மைக்ரோ-ஹச்டிஎம்ஐ மொபைலின் வலது பக்கம் கொண்டிருக்கிறது. இதுவே இதனுடைய முக்கிய அம்சமாகும். மேலும் கம்ப்யூட்டருடன் இணைப்பு வசதிக்காக யுஎஸ்பி போர்ட்டையும் கொண்டுள்ளது.

சாம்சங் கான்கர் 4ஜி ப்ளூடூத்தின் பல பரிமானங்களையும் வை-பை 802.11யும் சப்போர்ட் செய்கிறது. மேலும் இதன் யுஎஸ்பி 2.0 போர்ட் எளிதான சின்க்ரோனைசேஷனையும் வழங்குகிறது. இரண்டு மொபைல்களுமே மைக்ரோ எஸ்டியுடன் 32ஜிபி வரை விரிவுபடத்தக்கூடிய மெமரியைக் கொண்டிருக்கின்றன.

சாம்சங் கான்கர் 4ஜியின் பேட்டரி பேக்கப் 6 மணி வரை தொடர்ந்து செயல்படக்கூடிய அளவிலும் ஸ்டேண்ட்பே மோடில் 230 மணி வரை இருக்கக்கூடிய சக்தியைப் பெற்றுள்ளது. அதே சமயத்தில் எல்ஜி ரெவலியூஷன் 4ஜி 435 நிமிடங்கள் வரை தொடர்ந்து செயல்படக்கூடிய அளவிலும் ஸ்டேண்ட்பே மோடில் 335 மணி வரை இருக்கக்கூடிய பேட்டரி பேக்கப் பெற்றுள்ளது.

சாம்சங் கான்கர் 4ஜி இன்னும் இந்திய சந்தைக்கு வரவில்லை. அதுபோல் அதனுடைய விலையைப் பற்றிய தகவலும் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் ரூ. 35000க்கு எல்ஜி ரெவலியூஷன் 4ஜியை நாம் வாங்கலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்