அடுத்த வாரம் வரை எந்த போனும் வாங்கலனா.. அடுத்த 6 வருஷத்துக்கு எந்த போனும் வாங்க வேண்டாம்.. ஏன்னா?
சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் ஏ சீரிஸின் கீழ் புதிய மாடலை அறிமுகம் செய்து கிட்டத்தட்ட 1 வருடம் ஆகிவிட்டது. ஒருவழியாக அந்த காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ சீரிஸின் கீழ் 3 புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதை உறுதி செய்துள்ளது.
அதில் 2 மாடல்கள் அடுத்த 6 ஆண்டுகளுக்கு லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட்களை பெற உள்ளன. இவைகள் ஆண்ட்ராய்டு 21 ஓஎஸ் வரையிலான அப்டேட்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் அடுத்த 6 ஆண்டுகளில் ஆண்ட்ராய்டில் அறிமுகமாகும் புதிய அம்சங்கள் கிடைக்கும்.. இது அவுட்டேடட் போன்களாக மாறாது.. ஆக 6 ஆண்டுகளுக்கு புதிய அம்சங்களுக்காக புதிய மாடல்களை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது!

சாம்சங்கின் இந்த 3 புதிய ஏ சீரீஸ் மாடல்களும் மார்ச் 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, சாம்சங் நிறுவனம் அந்த 3 மாடல்களின் பெயர்களை வெளியிடவில்லை. ஆனால் பெரும்பாலும் அவைகள் கேலக்ஸி ஏ36 (Galaxy A36), கேலக்ஸி ஏ56 (Galaxy A56) மற்றும் கேலக்ஸி ஏ26 (Galaxy A26) மாடல்களாகத்தான் இருக்கும்.
ஏனெனில் இந்த 3 மாடல்களும் உலகளாவிய பட்டியல் தளத்தில் ஏற்கனவே தோன்றி உள்ளன. ஆகையால் இவைகள் உடனடி வெளியீட்டை காணும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை கேலக்ஸி ஏ56 ஸ்மார்ட்போன் ஆனது எக்ஸினோஸ் 1580 (Exynos 1580) சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் கேலக்ஸி ஏ36 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 (Snapdragon 6 Gen 3) சிப்செட்டை கொண்டிருக்கலாம்.
மேலும் கேலக்ஸி ஏ36 ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி ப்ரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ராவைடு கேமரா + 5MP மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வரலாம். மறுகையில் உள்ள கேலக்ஸி ஏ56 ஸ்மார்ட்போனும் 50எம்பி ட்ரிபிள் கேமரா செட்டப் உடன் வரலாம்.
முக்கிய அம்சங்களை தவிர, சாம்சங் நிறுவனம் இவ்விரு மாடல்களுக்கும் 6 வருட மென்பொருள் மேம்படுத்தல்களை (6 years of software upgrades) வழங்கலாம். எனவே, இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) உடன் வெளிவரலாம் மற்றும் ஆண்ட்ராய்டு 21 ஓஎஸ் (Android 21 OS) வரை அப்டேட்-ஐ பெறலாம்.
சமீபத்தில் தான் சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் 2 பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருந்தது. முதலாவது - கேலக்ஸி எப்06 5ஜி Samsung Galaxy F06 5G) - இது ரூ.9,499 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. இரண்டாவது - கேலக்ஸி ஏ06 5ஜி (Samsung Galaxy A06 5G) - இது 10,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையில் சாம்சங் நிறுவனம் அதன் எம் சீரீஸின் கீழ் இன்னொரு புதிய 5ஜி மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. அது சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி (Samsung Galaxy M16 5G) ஸ்மார்ட்போன் ஆகும்.
சாம்சங் கேலக்ஸி ஏ55 மற்றும் கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள்: இரண்டுமே டூயல்-சிம் (நானோ) ஆதரவு உடன் வருகின்றன. மேலும் இரண்டுமே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.6-இன்ச் எப்எச்டி பிளஸ் (1080 x 2408 பிக்சல்ஸ்) சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளன.
சாம்சங் கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் ஆனது 4என்எம் ப்ராசஸ் தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்ட எக்ஸினோஸ் 1480 சிப்செட்டை பேக் செய்கிறது. இது 12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போன் ஆனது 5என்எம் ப்ராசஸ் தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்ட எக்ஸினோஸ் 1380 சிப்செட்டை பேக் செய்கிறது.
இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் ஆனது ஆட்டோஃபோகஸுடன் கூடிய 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + 2-மெகாபிக்சல் சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இது 32 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
மறுகையில் உள்ள கேலக்ஸி ஏ35 ஸ்மார்ட்போன் ஆனது ஆட்டோஃபோகஸுடன் கூடிய 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + 5-மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இது 13 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








