Samsung-ன் சைலன்ட் சம்பவம்.. 50MP நோ ஷேக் கேமரா.. 6000mAh பேட்டரி.. 120Hz டிஸ்பிளே உடன் புதிய 5G மாடல்!
ஒட்டுமொத்த டெக் உலகமும் ஜூலை 26இல் நடக்கும் கேலக்ஸி அன்பேக்டு (Galaxy Unpacked) நிகழ்வில் அறிமுகமாகும் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 மற்றும் ஃபிளிப் 5 போன்கள் மீது கவனம் செலுத்தி கொண்டிருக்கும் வேளையில்.. சாம்சங் நிறுவனம் சைலன்ட் ஆக ஒரு சம்பவத்தை செய்துள்ளது.
சாம்சங் நிறுவனம் தனது எஃப்-சீரிஸின் (F-Series) கீழ் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. அது சாம்சங் கேலக்ஸி எஃப்34 5ஜி (Samsung Galaxy F34 5G) மாடலாகும். இந்திய அறிமுகத்தை உறுதி செய்த கையோடு இந்த ஸ்மார்ட்போனின் சில சிறப்பம்சங்களும் அதிகாரபூர்வமாக பகிரப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஃப்34 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடனான அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்பதை சாம்சங் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவானது 1000 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸை வழங்கும்.
கூடவே இதன் டிஸ்பிளே பிரகாசமான சூரிய ஒளியின் கீழும் கூட அதிவேகமான வியூயிங் எக்ஸ்பீரியன்ஸை (Viewing Experience) வழங்கும் என்றும் சாம்சங் குறிப்பிட்டுள்ளது. மேலும் சாம்சங் கேலக்ஸி எஃப்34 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது நோ-ஷேக் கேமரா (No Shake Camera) என்கிற அம்சத்துடனான 50எம்பி மெயின் கேமராவையும் கொண்டிருக்கும்.
சாம்சங் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போன் 16 விதமான இன்பில்ட் லென்ஸ் எபெக்ட்களை (Inbuilt Lens Effects) கொண்ட ஃபன் மோட்-ஐயும் (Fun Mode) கொண்டுள்ளது. கூடவே ஒரே ஷாட்டில் 4 வீடியோக்கள் மற்றும் 4 புகைப்படங்கள் வரை எடுக்கும் சிங்கிள் டேக் (Single Take) என்ற மற்றொரு கேமரா அம்சத்தையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
கடைசியாக சாம்சங் கேலக்ஸி எஃப்34 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6,000எம்ஏஎச் என்கிற பெரிய பேட்டரியையும் கொண்டிருக்கும், சாம்சங் நிறுவனத்தின் கூற்றுப்படி இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 2 நாட்கள் வரை பேட்டரி பேக்கப்பை (Battery Backup) வழங்கும்.
மிகவும் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வை பொறுத்தவரை, இது ஜூலை 26 ஆம் தேதி அன்று, இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும். இந்த நிகழ்வின் போது, சாம்சங் நிறுவனம் அதன் அடுத்த ஜெனெரஷன் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள் (Next Gen Foldable Smartphones), புதிய ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் புதிய டேப்லெட்டுகளை அறிமுகம் செய்ய உள்ளது.
புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை, கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 (Galaxy Z Fold 5) மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 (Galaxy Z Flip 5) மாடல்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இவ்விரு ஸ்மார்ட்போன்களும் முறையே ரூ.1,43,500 மற்றும் ரூ.95,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங்கின் புதிய 2023 ஃபோல்ட் மாடலானது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும் 7.6 இன்ச் டைனமிக் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது,, மேலும் இது 4400எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
மறுகையில் உள்ள புதிய ஃபிளிப் மாடலான சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 போன் ஆனது 6.7 இன்ச் அளவிலான டைனமிக் அமோஎல்இடி இன்னர் டிஸ்பிளே மற்றும் 3.4 இன்ச் அளவிலான அவுட்டர் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இது டூயல் ரியர் கேமரா செட்டப் மற்றும் 3700எம்ஏஎச் பேட்டரியையும் பேக் செய்யலாம்.
மேலும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வின் போது சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி வாட்ச் 6 சீரிஸ் (Galaxy Watch 6 Series) ஸ்மார்ட் வாட்சுகளும் அறிமுகம் செய்யப்படும். இதன் கீழ் கேலக்ஸி வாட்ச் 6 மற்றும் கேலக்ஸி வாட்ச் 6 கிளாசிக் அறிமுகம் செய்யப்படலாம். கடைசியாக இந்நிகழ்வின் போது கேலக்ஸி டேப் எஸ்9 சீரிஸ் (Galaxy Tab S9 Series) டேப்லெட்களும் அறிமுகம் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








