Home
Mobile

சாம்சங் சேம்ப் நியோ டூவோஸ் மற்றும் நோக்கியா ஆஷா 305 - ஒரு ஒப்பீடு

By Karthikeyan
சாம்சங் சேம்ப் நியோ டூவோஸ் மற்றும் நோக்கியா ஆஷா 305 - ஒரு ஒப்பீடு

இந்திய மொபைல் சந்தையில் பன்னாட்டு மொபைல் நிறுவனங்களும், உள்நாட்டு மொபைல் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு புதிய புதிய மொபைல்களை களமிறக்கிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு எவ்வளவுதான புதிய தொழில் நுட்பங்களுடன், புதிய மாடல்களில், உயர்ந்த விலையில் போன்கள் விற்பனைக்கு வந்தாலும். குறைந்த விலை போன்களும் சந்தைக்கு வந்து கொண்டே இருக்கின்றன.

அதுவும் ஒரு குறிப்பிட்ட மக்களை குறிவைத்தே இந்த குறைந்த விலை போன்கள் விற்பனைக்கு வருகின்றன. அந்த வகையில் கொரிய நிறுவனமான சாம்சங் ரூ.3,260க்கு ஒரு புதிய போனைக் களமிறக்கி இருக்கிறது. சேம்ப் நியோ டூவோஸ் என்று அழைக்கப்படும் இந்த போன் டூவல் சிம் வசதி கொண்டது. ஆனால் இது ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் வரவில்லை. ஆனால் தொடுதிரை வசதியைக் கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் மறுபுறம் நோக்கிய நிறுவனமும் ஒரு குறைந்த விலை போனைக் களமிறக்கி இருக்கிறது. ஆகஸ்ட்டில் வந்த இந்த போனுக்கு ஆஷா 305 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. டூவல் சிம் வசதி கொண்ட இந்த போன் ரூ.4,668க்கு விற்கப்படுகிறது.

சாம்சங்கின் சேம்ப் போனில் இருக்கும் தொழில் நுட்ப வசதிகளை எடுத்துக் கொண்டால் அது 2.4 இன்ச் அளவில் ஒரு டிஎப்டி தொடுதிரையைக் கொண்டிருக்கிறது. அதுபோல் இந்த டிஸ்ப்ளேயில் க்யுவிஜிஎ ரிசலூசன் உள்ளதால் இந்த டிஸ்ப்ளே மிகத் தெளிவாக இருக்கும்.

அதே நேரத்தில் ஆஷா 305 போன் 3 இன்ச் அளவில் டிஎப்டி தொடு திரையைக் கொண்டிருக்கிறது. இதன் திரை சற்று பெரியதாக இருக்கிறது. இரண்டு போன்களும் 1 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸரைக் கொண்டிருக்கின்றன.

கேமராவைப் பொருத்தமட்டில் சேம்ப் பின்பக்கம் விஜிஎ கேமராவைக் கொண்டிருக்கிறது. ஆனால் ஆஷா 305 போன் 2எம்பி பின்பக்க கேமராவைக் கொண்டுள்ளது. ஆனால் இரண்டு போன்களிலும் முகப்பு கேமரா இல்லை.

சேம்ப் போனில் 20எம்பி சேமிப்பு உள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் இந்த சேமிப்பை 32ஜிபி அளிவிற்கு விரிவுபடுத்த முடியும். அதே நேரத்தில் ஆஷா 10எம்பி சேமிப்பையும் மற்றஉம் 32எம்பி ரேமையும் கொண்டிருக்கிறது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்டும் இதில் உள்ளதால் இதன் மெமரியை 32ஜிபி வரை அதிகரிக்க முடியும்.

இணைப்பு வசதிகளைப் பொருத்தமட்டில் இரண்டு போன்களுமே ப்ளூடூத் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போன்ற வசதிகளைக் கொண்டுள்ளன. இவற்றின் பேட்டரிகளும் நீடித்த இயங்கு நேரத்தை வழங்குகின்றன.

இந்த இரண்டு போன்களுமே விலைக்குத் தகுந்தவாறு தொழில் நுட்ப வசதிகளுடன் வருகின்றன. சேம்ப் போன், சாட்ஆன், யாகூ, எம்எஸ்என், ஜிடாக், புஷ் மெயிலுடன் கூடிய ஆக்டிவ் சின்க், பேஸ்புக், மற்றும் டிவிட்டர் போன்ற அப்ளிகேசன்களை வழங்குகின்றன. மேலும் இந்த போனில் சாம்சங் அப் ஸ்டோரையும் அக்சஸ் செய்ய முடியும்.

அதே நேரத்தில் நோக்கியா ஆஷா போன் 40 வகையான இஎ கேம்களை இலவசமாக வழங்குகிறது. பெரிய திரையை விரும்புவோர் இந்த ஆஷா போனை வாங்கலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X