Home
Mobile

சாம்சங் சாம்ப் டச் ஸ்கிரீன் போன்- சிறப்பு பார்வை

By Karthikeyan
சாம்சங் சாம்ப் டச் ஸ்கிரீன் போன்- சிறப்பு பார்வை

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பதுபோல், பட்ஜெட் விலை கொண்டதாக இருக்க வேண்டும், அதேவேளை டச் ஸ்கிரீன், டியூவல் சிம் உள்ளிட்ட அத்தனை வசதிகளும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காவே சாம்சங் களமிறக்கியிருக்கும் போன்தான் சாம்ப் டீலக்ஸ் டூவோஸ்.

வெறும் 4000 விலையில் இத்தனை வசதிகளையும் ஒரு பிராண்டடு நிறுவனம் வழங்குவது வியப்பை ஏற்படுத்துகிறது. ஒன் இந்தியா முகப்பு பக்கத்தில் அடிக்கடி உங்களை வலிய வந்து அழைக்கும் இந்த பட்ஜெட் டச் ஸ்கிரீன் போனை பற்றிய சிறப்பம்ங்களை இங்கே காணலாம்.

டியூவல் சிம் வசதி:

தொழில் மற்றும் தனிப்பட்ட பயன்பாடுகளுக்காக இரண்டு சிம் கார்டு கொண்ட போன்கள் மலிந்து விட்டன. ஆனால், இந்த போன் தொடுதிரை வசதி கொண்டிருப்பதால் ஒரு சிம் கார்டு நெட்வொர்க்கிலிருந்து மற்றொன்றுக்கு மாறுவது வெகு எளிதாக இருக்கிறது. ஒரே டச்சில் மற்றொரு சிம் கார்டுக்கு மாறிமுடிகிறது.

பிரிமியம் டிசைன்:

போனில் எது இருக்கிறதோ இல்லையோ பார்க்க பந்தாவாக இருக்க வேண்டும் நினைப்பது இயல்பு. அதில் ஒரு சிறு குறையையும் வைக்கவில்லை சாம்சங் சாம்ப் டீலக்ஸ் டூவோ. தவிர, வெகு அழகாக கையாளும் விதமாக கைகளுக்கு கச்சிதமாக இருக்கிறது.

ஸ்மார்ட் டச் வசதி:

7.1 செமீ அளவு தொடுதிரை கொண்ட இந்த போனில் டச்விஸ் 2.0 லைட் யூஸர் இன்டர்பேஸ் தொழில்நுட்பம் இருப்பதால் விரைவாக அப்ளிகேஷன்களை திறக்க முடியும். இதனால், நேரம் மிச்சமாவதோடு பேட்டரி ஆற்றல் விரயமாவதும் தவிர்க்கிறது.

சோஷியல் மீடியா வசதி:

எது இல்லையென்றாலும் ஃபேஸ்புக், ட்வீட்டர் வசதி இல்லாமல் இருந்தால் அது நிறைவு தராது அல்லவா. எனவே, எங்கு சென்றாலும் விரைவாக சமூக வலைதளங்களுக்குள் விரைவாக செல்லும் வசதியை கொண்டிருக்கிறது. இதில், சாம்சங் சாட்ஆன் மெசஞ்சர் வசதியும் உள்ளதால் சாட்டிங் செய்வதற்கு ஏதுவாக இருக்கிறது.

பொழுதுபோக்கு அம்சங்கள்:

இதில், எம்பி-3 ப்ளேயர், எப்எம் ரேடியோ, வசதிகள் இருப்பதோடு, உங்களுக்கேற்ற மல்டிமீடியா அப்ளிகேஷன்களை டவுன்லோடு செய்தும் மல்டி மீடியா ப்ளேயரை கஸ்டமைஸ் செய்து கேட்க முடியும். இது நிச்சயம் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும்.

ஆனால், கேமராதான் ஏமாற்றுகிறது. இதில், 1.3 மெகாபிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. விலையை பார்க்கும்போது கேமராவை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று சமாதானப்படுத்துகிறது நம் மனது.

இதர அம்சங்கள்:

3.0 வெர்ஷன் ப்ளூடூத், இன்டர்நெட் அக்செஸ் வசதியும் இருக்கிறது. எளிதாக இமெயில்களை அனுப்பவும் முடியும். 2ஜி நெட்வொர்க்கை சப்போர்ட் செய்யும். எடை வெறும் 100 கிராம் மட்டுமே. 3.5 மிமீ ஆடியோ ஜாக் இருக்கிறது. 32 ஜிபி வரை சேமிப்பு திறனை அதிகரித்துக்கொள்ளும் வசதி.

பேட்டரி:

இதில், 1000எம்ஏஎச் லித்தியம் அயான் ஸ்டான்டர்டு பேட்டரி கொண்டிருக்கிறது. இந்த பேட்டரி 14 மணிநேர டாக்டைமை கொடுக்கிறது. இதன் ஸ்டான்ட்-பை டைம் 600 மணி நேரம்.

விலை:

ஒரு ஸ்மார்ட்போனுக்குரிய அனைத்து தொழில்நுட்பம் மற்றும் வசதிகளை கொண்டிருக்கும் இந்த டியூவல் சிம் போனை வெறும் ரூ.4090 என்ற விலையில் கிடைக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X