கூடுதல் தொழில்நுட்ப வசதிகளுடன் வரும் சாம்சங் சேம்ப்-2!

By Super
|
கூடுதல் தொழில்நுட்ப வசதிகளுடன் வரும் சாம்சங் சேம்ப்-2!

சிறந்த ஸ்மார்ட்போனை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சேம்ப் ஸ்மார்ட்மொபைலை ஏற்கனவே சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், மார்க்கெட் நிலவரத்தை அறிந்துகொண்டு சேம்ப் ஸ்மார்ட்போனை கூடுதல் தொழில் நுட்ப வசதிகளுடன் புதிய சேம்ப்-2 என்ற பெயரில் அறிமுகப்படுத்துகிறது சாம்சங்.

இந்த ஸ்மார்ட்மொபைல் 6.1 செமீ கியூவிஜிஏ டச் ஸ்கிரீன் வசதி கொண்டது. இதனால் 320 x 240 திரை துல்லியத்தை பெற முடியும். இதில் பொருத்தப்பட்டிருக்கும் 2 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் அழகான புகைப்படங்களை எடுத்து மகிழலாம். வீடியோ போன்ற வசதிகளை பெறலாம்.

இந்த புதிய சேம்ப்-2 மொபைலில் 2 மெகா பிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. சேம்ப்-2 மொபைல் போதிய திரை துல்லித்தையும், கேமரா துல்லியத்தையும் கொடுக்கும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.

இதன் இன்டர்னல், எக்ஸ்டர்னல் மெமரியின் மூலம் தகவல்களை சேகரித்து கொள்ளலாம். 16ஜிபி வரை இதன் மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளலாம். சாம்சங் சேம்ப்-2 ஸ்மார்ட்மொபைல் சாம்சங்கின் புரோப்பரேட்டரி ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் இயங்கும்.

இதில் 1,000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால் 500 மணி நேரம் ஸ்டான்-பை டைமும், 10 மணி நேரம் டாக் டைமும் பெற முடியும். இதன் வைபை வசதியின் மூலம் சிறந்த நெட்வொர்கினை பெறலாம்.

இப்பொழுதெல்லாம் நெட் வசதி என்பது முக்கிய இடத்தில் பங்கு பெறுகிறது. அதிக வசதியினை அளிக்க இருக்கும் இந்த சாம்சங் சேம்ப்-2 ஸ்மார்ட்மொபைல், கவர்ச்சிகரமான விலையில் வெளிவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதன் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X