அடிதூள்.. செகண்ட்-ஹேண்ட் போன்களை தரமாக ரிப்பேர் செய்து கம்மி விலைக்கு விற்கும் Samsung.. எந்த மாடல்கள்?
அனைவருமே ஒரு பிரீமியம் சாம்சங் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் அனுபவத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தில், சாம்சங் (Samsung) நிறுவனம் ஆனது சர்டிஃபைட் ரீ-நியூடு (Certified Re-Newed) என்கிற திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி உள்ளது. மற்ற புதுப்பிப்பாளர்கள் (Refurbishers) மற்றும் தேர்ட்-பார்ட்டி விற்பனையாளர்களிடமிருந்து சாம்சங்கின் சர்டிஃபைட் ரீ-நியூடு திட்டத்தை வேறுபடுத்துவது எது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.
சாம்சங் சர்டிஃபைட் ரீ-நியூடு புரோகிராம் என்றால் என்ன? பெயருக்கு ஏற்றாற்போல், இந்த திட்டத்தின் கீழ், சாம்சங் நிறுவனம், அசல் பாகங்கள் மற்றும் உதிரிபாகங்களுடன் கூடிய, புதுப்பிக்கப்பட்ட பிளாக்ஷிப் மற்றும் மிட்-ரேன்ஜ் வகை ஸ்மார்ட்போன்களை குறைக்கப்பட்ட விலையில் வழங்கும். இந்த ஸ்மார்ட்போன்கள் ஓராண்டு உத்தரவாதத்துடன் விற்கப்படும், மேலும் அந்த மாடல்களின் புதிய மாடல்களுக்கு கிடைக்கும் அதே சாஃப்ட்வேர் அப்டேட்களையும் பெறும்.

மற்ற புதுப்பிப்பாளர்கள் மற்றும் தேர்ட்-பார்ட்டி விற்பனையாளர்களிடமிருந்து சாம்சங்கின் சர்டிஃபைட் ரீ-நியூடு திட்டத்தை வேறுபடுத்துவது எது? அறியாதோர்களுக்கு - அமெரிக்கா மற்றும் தென் கொரியா உட்பட பல நாடுகளில் ஏற்கனவே இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இது புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதற்கான சாம்சங்கின் அதிகாரப்பூர்வ வழியாகும்.
மூன்றாம் தரப்பு புதுப்பிக்கப்பட்ட விற்பனையாளர்களை போலல்லாமல், ஸ்மார்ட்போன்கள் அசல் உற்பத்தியாளரின் தரநிலைகளை பூர்த்தி செய்வதை உறுதிசெய்ய, சாம்சங் முழு மறுசீரமைப்பு செயல்முறையையும் நிறுவனத்திற்குள்ளேயே நிர்வகிக்கிறது. இந்த திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், ஒரு புத்தம் புதிய ஸ்மார்ட்போனை போலவே, ஒவ்வொரு போனுக்கும் சாம்சங்கிலிருந்து ஓராண்டு உத்தரவாதம் வழங்கப்படுகிறது.
மேலும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, அனைத்து ஸ்மார்ட்போன்களும் அசல் சாம்சங் பாகங்களை பயன்படுத்தி புதுப்பிக்கப்பட்டு, கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. முந்தைய உரிமையாளரின் தரவுகள் முழுமையாக அகற்றப்படுவதை உறுதிசெய்ய, ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் பேக்டரி ரீசெட் (factory reset) செய்யப்படுகிறது.
மேலும், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பை உறுதிசெய்ய, அதில் லேட்டஸ்ட் சாஃப்ட்வேர் ஏற்றப்படுகிறது. இறுதியாக, புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போனுடன் அனைத்து அசல் ஆக்சஸெரீஸ்களும் ஒரு புதிய பாக்ஸில் வாங்குபவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இப்படியாக சாம்சங் நிறுவனத்தின் சர்டிஃபைட் ரீ-நியூடு திட்டத்தின் கீழ் தற்போது குறைவான விற்கப்படும் சாம்சங் போன்களின் லிஸ்ட் இதோ:
லான்ச் ப்ரைஸ் VS ரீபர்பிஷ்டு ப்ரைஸ் (Launch Price VS Refurbished Price): இதற்கென சான்றளிக்கப்பட்ட புதுப்பித்தல் திட்டத்திற்கென அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இணையதளம் இப்போது பயன்பாட்டில் உள்ளது. இது திட்டத்தின் முழுமையான பலன்களை விவரிப்பது மட்டுமல்லாமல், பயனர்கள் அங்கிருந்து நேரடியாக புதுப்பிக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்களை வாங்கவும் அனுமதிக்கிறது.
- சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்) மாடல் ரூ.1,29,999 க்கு பதிலாக ரூ.97,499 க்கு வாங்க கிடைக்கிறது
- சாம்சங் கேலக்ஸி எஸ்25 (256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்) மாடல் ரூ.80,999 க்கு பதிலாக ரூ.58,749 க்கு வாங்க கிடைக்கிறது
- சாம்சங் கேலக்ஸி ஏ56 (12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன்) மாடல் ரூ.47,999 க்கு பதிலாக ரூ.32,749 க்கு வாங்க கிடைக்கிறது
- சாம்சங் கேலக்ஸி ஏ56 (8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன்) மாடல் ரூ.44,999 க்கு பதிலாக ரூ.31,499 க்கு வாங்க கிடைக்கிறது
- சாம்சங் கேலக்ஸி ஏ36 (8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன்) மாடல் ரூ.35,999 க்கு பதிலாக ரூ.23,249 க்கு வாங்க கிடைக்கிறது
OPINION: சாம்சங் நிறுவனத்தின் இந்த சர்டிஃபைட் ரீ-நியூடு, அனைத்து விலை வரம்புகளிலும் சாம்சங்கின் நீண்ட கால சாஃப்ட்வேர் உறுதிப்பாட்டிற்கு கச்சிதமாக பொருந்துகிறது. உதாரணமாக, கேலக்ஸி எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஏழு ஆண்டுகளுக்கு உறுதியான ஓஎஸ் மேம்படுத்தல்களுடன் வரும் அதே வேளையில், கேலக்ஸி ஏ மற்றும் எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் குறைந்தது ஆறு ஆண்டுகளுக்கு ஓஎஸ் மேம்படுத்தல்களை பெறுகின்றன.
ரீபர்பிஷ்டு செய்யப்பட்ட ஸ்மார்போன்களுக்கு மென்பொருள் ரீதியாக நீண்ட கால ஆதரவு அளிக்கப்படுவதால், "கைவிடப்பட்ட" ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு மறுவாழ்வு கொடுப்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. இது மின்னணு கழிவுகளைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், வாங்குபவர்கள் உயர்தர சாம்சங் போன்களை மிகவும் மலிவு விலையில் வாங்கவும் அனுமதிக்கிறது.


Click it and Unblock the Notifications