Home
Mobile

நான்கு அசத்தலான சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு சூப்பர் சலுகை: உடனே முந்துங்கள்.!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம் சீரிஸின் இரண்டாம் ஆண்டு விற்பனையின் ஒரு பகுதியாக கேலக்ஸி எம்21, கேலக்ஸி எம்31, கேலக்ஸி எம்31எஸ், கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன்களுக்கு குறிப்பிட்ட தள்ளுபடியை வழங்கியுள்ளது. குறிப்பாக இந்த தள்ளுபடி சலுகை வரும் மார்ச் 12-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங்.காம் ஆகியவற்றிலிருந்து எச்.டி.எஃப்.

அதன்படி இந்த கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஏதேனும் ஒன்றை அமேசான் வலைத்தளம் மற்றும்சாம்சங்.காம் ஆகியவற்றிலிருந்து எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளுடன் வாங்குவோர் ரூ .1000 கேஷ்பேக் சலுகையைப் பெறலாம்.மேலும் குறிப்பிட்ட சலுகை இந்த ஸ்மார்ட்போன்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்21

சாம்சங் கேலக்ஸி எம்21

சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் மாடல் எக்ஸிநோஸ் 9611 எஸ்ஒசி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக 6000 எம்ஏஎச் பேட்டரி, 48எம்பி பிரைமரி சென்சார் உள்ளிட்ட பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன். பின்பு அமேசான் தளத்தில்
இந்த சாதனத்தின் விலை ரூ.13,999-ஆக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்31

சாம்சங் கேலக்ஸி எம்31

சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது எக்ஸிநோஸ் 9611 எஸ்ஒசி சிப்செட் மற்றும் 6000 எம்ஏஎச் பேட்டரி வசதிகளை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாதனம். மேலும் 64எம்பி கேமராவுடன் மொத்தம் நான்கு பின்புற கேமராக்கள் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன். அமேசான் வலைத்தளத்தில் இந்த சாதனத்தின் விலை ரூ.16,499-ஆக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்31எஸ்

சாம்சங் கேலக்ஸி எம்31எஸ்

இந்தியாவில் மோட்டோ ஜி10 பவர், மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! நம்பி வாங்கலாம்.!சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன் மாடல் எக்ஸிநோஸ் 9611 எஸ்ஒசி சிப்செட் மற்றும் 6000 எம்ஏஎச் பேட்டரி வசதிகளை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இவற்றுள் அடக்கம். பின்பு 64எம்பி பிரைமரி கேமராவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக அமேசான் வலைத்தளத்தில் இந்த சாதனத்தின் விலை ரூ.18,499-ஆக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்51

சாம்சங் கேலக்ஸி எம்51

சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் மாடல் ஸ்னாப்டிராகன் 730ஜி சிப்செட் மற்றும் 7000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது.பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இவற்றுள் அடக்கம். மேலும் 64எம்பி பிரைமரி கேமரா உட்பட மொத்தம் நான்கு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன். குறிப்பாக அமேசான் வலைத்தளத்தில் இந்த சாதனத்தின் ரூ.22,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Carnival Sale: Offers On Samsung Galaxy M series Phones And More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X