Home
Mobile

ஆற்றல் வாய்ந்த பிராசஸருடன் சாம்சங் ஸ்மார்ட்போன்

ஆற்றல் வாய்ந்த பிராசஸருடன் சாம்சங் ஸ்மார்ட்போன்
முன்பெல்லாம் தகவல்களை தெரியப்படுத்தவது மிகவும் சிரமமான ஒரு விஷயமாக இருந்தது. ஆனால் இப்பொழுது எந்த தகவல்களையும் மின்னல் வேகத்தில் தெரிந்து கொள்ளவும், தெரியப்படுத்தவும் முடியும்.

அந்த அளவு விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. இத்தகைய வளர்ச்சியைப் பெற்று வரும் மொபைல் உலகில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறது சாம்சங் நிறுவனம். கேப்டிவேட் கிளைடு என்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம்.

இந்த மொபைல் ஆன்ட்ராய்டு 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் இயங்குகிறது. இந்த ஓஎஸ் எளிதாக இயங்க, இதன் 1,000 எம்ஏஎச் டியூவல் கோர் என்விஐடிஐஏ டெக்ரா2 ஏபி20எச் பிராசஸர் பெரிதும் துணைபுரிகிறது. இதனால் எவ்வளவு நுணுக்கமான தகவல்களையும் அதி வேகத்தில் பெறலாம்.

திரையிலும் சரி, கேமரா பிக்ஸலிலும் சரி இதன் தறம் அதிகம்தான். 4 இஞ்ச் அகன்ற திரை தொழில் நுட்பம் கொண்ட இந்த மொபைல் 8 மெகா பிக்ஸலை கொண்டுள்ளது. இந்த கேமராவின் மூலம் எடுக்கின்ற புகைப்படங்களை, இந்த அகன்ற திரையின் மூலம் மிக தெளிவாகவும், முழுமையாகவும் பார்க்க முடியும்.

1280 X 720 பிக்ஸல் துல்லியத்தையும் வழங்குகிறது. அது மட்டும் அல்லாது இதில் இன்னொரு 1.3 மெகா பிக்ஸல் முகப்புக் கேமராவினையும் கொண்டுள்ளது. எந்த வித சிரமமும் இன்றி 720பி துல்லியத்தில் வீடியோ பதிவினையும் செய்ய முடியும்.

இந்த ஸ்மார்டமொபைல் ஆடியோ மற்றும் வீடியோ ஃபார்மெட்டுகளுக்கு சப்போர்ட் செய்கிறது. இதன் எப்எம் ரேடியோவில், ஆர்டிஎஸ் தொழில் நுட்பமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்டர்நெட் வசதிக்கும் இந்த மொபைல் சப்போர்ட் செய்வதால் ஃபேஸ்புக்,பிக்காஸோ, ட்விட்டர், இ-மெயில், கூகுள் டாக் போன்ற சேவைகளையும் பெற முடியும். புளூடூத், யூஎஸ்பி 2.0 போர்ட் தொழில் நுட்பத்திற்கும் பயன்படுகின்றது. இதில் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இதனால் சிறப்பான டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைமையும் கொடுக்கும். இந்த மொபைலின் விலை இன்னும் தெரியவரவில்லை. இது போன்ற உயர்ந்த தொழில் நுட்பம் கொண்டு அதிக வசதிகளை நிச்சயம் வாடிக்கையாளர்களால் இந்த மொபைலின் மூலம் பெற முடியும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X