கேலக்ஸி பீம் மற்றும் கேலக்ஸி ஏஸ்-2 வெளியாகும் தேதி!

By Super
|
கேலக்ஸி பீம் மற்றும் கேலக்ஸி ஏஸ்-2 வெளியாகும் தேதி!


கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போனான கேலக்ஸி பீம் ஸ்மார்ட்போன் மற்றும் கேலக்ஸி ஏஸ்-2 ஸ்மார்ட்போன் சிங்கப்பூரில் வெளியாகும் தேதியினை அறிவித்துள்ளது சாம்சங் நிறுவனம்.

கேலக்ஸி பீம் ஸ்மார்ட்போன் மற்றும் கேலக்ஸி ஏஸ்-2 என்ற இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் வருகையை வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். அதிக வரவேற்பினை வாடிக்கயாளர்களிடம் இருந்து பெற்றள்ளது கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போன்கள்.

கேலக்ஸி ஏஸ்-2 ஸ்மார்ட்போன் 3.8 இஞ்ச் திரை வசதியும், கேலக்ஸி பீம் ஸ்மார்ட்போன் 3.7 இஞ்ச் திரை வசதியினையும் கொண்டது. கேலக்ஸி பீம் ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு வி2.1 எக்லர்ஸ் இயங்குதளத்திலும், கேலக்ஸி ஏஸ்-2 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜர்பிரெட் இயங்குதளத்திலும் இயங்கும்.

இந்த 2 ஸ்மார்ட்போன்களிலும் ஐஸ் கிரீம் சான்ட்விச் மற்றும் ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அப்கிரேட் வசதியும் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் நிறுவனத்தின் இந்த கேலக்ஸி பீம் ஸ்மார்ட்போன் ரூ. 28,495 விலையில் வருகிற 7-ஆம் தேதி வெளியாகும் என்றும், கேலக்ஸி ஏஸ்-2 ஸ்மார்ட்போன் ரூ. 19,285 விலையில் இந்த மாத இறுதியில் சிங்கப்பூரில் வெளியாகும் என்றும் சாம்சங் நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X