Home
Mobile

நோக்கியாவிற்கு சவால்விடும் சாம்சங்!

By Super
நோக்கியாவிற்கு சவால்விடும் சாம்சங்!

விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் லுமியா-610 ஸ்மார்ட்போனுக்கு, போட்டியாக சாம்சங் நிறுவனம் புதிய ஆம்னியா-எம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

நோக்கியா நிறுவனத்தின் சிறந்த படைப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது லுமியா வரிசை ஸ்மார்ட்போன்கள். குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட்போனாக சாம்சங் நிறுவனத்தின் இந்த ஆம்னியா-எஸ் ஸ்மார்ட்போன் இருக்கும்.

சாம்சங் ஆம்னியா-எஸ் ஸ்மார்ட்போன் விலையிலும் கிட்டதட்ட, லுமியா-610 ஸ்மார்ட்போனின் விலையை கொண்டதாக இருக்கும். லுமியா-610 ஸ்மார்ட்போன் ரூ.11,000 விலை கொண்டது.

இன்னும் சொல்லப்போனால் ஆம்னியா-எம் ஸ்மார்ட்போன், லுமியா-610 ஸ்மார்ட்போனையும் விட குறைந்த விலை கொண்டதாக கூட இருக்கலாம்.3.7 இஞ்ச் திரை கொண்ட இந்த லுமியா-610 ஸ்மார்ட்போன் 800 மெகாஹெர்ட்ஸ் பிராசஸர் கொண்டது.

சாம்சங் ஆம்னியா-எஸ் ஸ்மார்ட்போன், லுமியா-610 ஸ்மார்ட்போனை காட்டிலும் பெரிய திரை கொண்டதாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் திரை கொண்டதாக இருக்கும். அதோடு ஆம்னியா-எம் ஸ்மார்ட்போன் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும்.

லுமியா-610 ஸ்மார்ட்போனை போல ஆம்னியா-எம் ஸ்மார்ட்போன் சிறந்த 5 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டதாக இருக்கும். ஆனால் ஆம்னியா-எம் ஸ்மார்ட்போனில் கூடுதலாக விஜிஏ கேமராவும் இருக்கும்.

பேட்டரியிலும் லுமியா-610 ஸ்மார்ட்போனை, ஆம்னியா-எம் ஸ்மார்ட்போன் சிறந்த பேட்டரியை கொண்டதாக இருக்கும் போல் தெரிகிறது. ஆம்! லுமியா-610 ஸ்மார்ட்போன் 1,300 எம்ஏஎச் பேட்டரியினை கொண்டதாக இருக்கும். சாம்சங் ஆம்னியா-எம் ஸ்மார்ட்போன் 1,500 எம்ஏஎச் பேட்டரியினை கொண்டதாக இருக்கும்.

இன்னும் இந்த ஸ்மார்ட்போனில் மூவி மற்றும் கேம்களை எளிதாக ப்ளே செய்யலாம். அதோடு ஸ்மார்ட் டிஜே, மியூசிக் ஹப் போன்ற சிறந்த தொழில் நுட்ப வசதியினையும் பன்படுத்தலாம்.

இத்தகைய சிறந்த தொழில் நுட்பத்தினை கொடுக்கும் ஆம்னியா-எம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் விவரத்தினையும் வெளியிட்டுவிட்டது சாம்சங். இந்த ஸ்மார்ட்போன் முதலில் ஐரோப்பா நாடுகளில் வெளியாகும். அதன் பிறகு மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X