பிராத்தியேக சாட்ஆன் பட்டனுடன் சாம்சங் ஸ்மார்ட்போன்!

கேலக்ஸி சாட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவதாக அறிவித்துள்ளது சாம்சங் நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்.
இதில் உள்ள ஒரு பிரத்தியேக வசதி என்னவென்றால், எளிதாக சாட் செய்வதற்கு பிரத்தியேகமாக சாட்ஆன் பட்டனும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் கியூவர்டி கீப்பேட் வசதி, இந்த ஸ்மார்ட்போனுக்கு ஒரு சிறப்பான தோற்றத்தினை கொடுக்கும்.
3.0 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் தகவல்களை தெளிவாக வழங்கும். ஆனால் இதன் கேமரா அதிக பிக்ஸல் கொண்டதாக இல்லை. இந்த ஸ்மார்ட்போன் 2 மெகா பிக்ஸல் கேமராவினை மட்டும் கொண்டதாக உள்ளது.
இதன் மூலம் போதுமான அளவு தெளிவான புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெறலாம். 4 ஜிபி இன்டர்னல் வசதி உள்ளதால், சிறந்த வகையில் தகவல்களை ஸ்டோர் செய்து வைத்து கொள்ள முடியும்.
இந்த கேலக்ஸி சாட் ஸ்மார்ட்போனில் 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளலாம். தொடுதிரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் வைபை தொழில் நுட்ப வசதியினையும் பயன்படுத்தலாம்.
கேலக்ஸி சாட் ஸ்மார்ட்போன் 1,200 எம்ஏஎச் பேட்டரியும் இதில் உள்ளதால் சிறந்த தொழில் நுட்பத்திற்கு, இந்த ஸ்மார்ட்போன் சப்போர்ட் செய்யும்.


Click it and Unblock the Notifications