OFFER-னா இப்படி இருக்கணும்.. ஒரே நேரத்தில் 2 Samsung போன்கள் மீது ரூ.12,000 டிஸ்கவுண்ட்.. எந்த மாடல்கள்?
சாம்சங் (Samsung) நிறுவனத்தின் 3 லேட்டஸ்ட் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களின் மீதும் "பலே டிஸ்கவுண்ட்" அறிவிக்கபட்டு உள்ளது. அவைகள் - கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 (Galaxy Z Fold 7), கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 (Galaxy Z Flip 7) மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 எப்இ (Galaxy Z Flip FE) மாடல்கள் ஆகும்.
சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இ-ஸ்டோர் (Samsung e-store) ஆனது இந்த 3 மாடல்கள் மீதும் ரூ.12,000 வரையிலான வங்கி தள்ளுபடியும், பழைய ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேன்ஜ் செய்யும் போது கிடைக்கும் எக்ஸ்சேஞ்ச் போனஸும் அறிவித்துள்ளது. எந்தெந்த மாடல் மீது எவ்வளவு டிஸ்கவுண்ட்டை பெறலாம்? இதோ விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 7 அல்லது சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 7 ஸ்மார்ட்போனை வாங்க விரும்புவோர்கள், எச்டிஎப்சி ( HDFC) மற்றும் ஆக்சிஸ் பேங்க் (Axis Bank கி ரெடிட் கார்டு வழியாக செலுத்தும் முழு கட்டணத்தில் ரூ.12,000 தள்ளுபடியை பெறலாம். அதே நேரத்தில் சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 7 எப்இ ஸ்மார்ட்போனை வாங்குபவர்கள் ரூ.10,000 தள்ளுபடியை பெறலாம்.
கூடுதலாக, சாம்சங் நிறுவனம் 24 மாதங்கள் வரையிலான நோ காஸ்ட் இஎம்ஐ சலுகையையும் வழங்குகிறது. மேலும் தங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்ற விரும்புவோருக்கு, கூடுதலாக ரூ.12,000 சாம்சங் அப்கிரேட் போனஸும் கிடைக்கும். இருப்பினும், இதை வங்கி தள்ளுபடியுடன் இணைக்க முடியாது. அதாவது பேங்க் ஆபர் அல்லது எக்ஸ்சேன்ஜ் ஆபர் - இரண்டில் ஒன்றைத்தான் பயன்படுத்த முடியும்
கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் 6.9-இன்ச் FHD+ AMOLED மெயின் டிஸ்பிளே
- 120 ஹெர்ட்ஸ் 4.1-இன்ச் சூப்பர் AMOLED கவர் டிஸ்பிளே
- எக்ஸினோஸ் 2500 சிப்செட்
- 12 ஜிபி வரை ரேம்
- 512 ஜிபி வரை ஸ்டோரேஜ்
- 50MP பிரைமரி கேமரா
- 12MP அல்ட்ராவைடு சென்சார்
- 10MP செல்பீ கேமரா
- 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்
- ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0
- வயர்லெஸ் பவர்ஷேர் அம்சம்
- 4,300mAh பேட்டரி
கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 எப்இ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் 6.7-இன்ச் FHD+ AMOLED மெயின் டிஸ்பிளே
- 3.4-இன்ச் சூப்பர் AMOLED கவர் டிஸ்பிளே
- எக்ஸினோஸ் 2400 சிப்செட்
- 8ஜிபி ரேம்
- 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 4,000mAh பேட்டரி
- 25W சார்ஜிங்
- வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 8-இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்பிளே
- 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5-இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2X கவர் டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 3 எக்ஸ்டர்னல் கேமரா யூனிட்
- குவாட் பிக்சல் ஆட்டோஃபோகஸ், ஓஐஎஸ் ஆதரவு மற்றும் 85-டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூவுடன் கூடிய 200 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா
- 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார்
- கவர் டிஸ்பிளேவில் 10 மெகாபிக்சல் கேமரா
- இன்னர் ஸ்க்ரீனில் மற்றொரு 10 மெகாபிக்சல் கேமரா
- 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 4400mAh பேட்டரி
- 25W அடாப்டர் மூலம் 30 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்
- பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் ஆதரவு


Click it and Unblock the Notifications








