ரூ.11,000 லாபம் பார்க்கலாம்! Galaxy S25 மீது 2 சலுகைகளை அறிவித்த Samsung.. எல்லாம் Galaxy S25 Edge வந்த நேரம்!
இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆக கேலக்ஸி எஸ்25 எட்ஜ (Samsung Galaxy S25 Edge) அறிமுகமான வேகத்தில், அதே சீரீஸின் கீழ் முன்னதாக அறிமுகமாகி இருந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 (Samsung Galaxy S25) மீது 2 வகையான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதென்ன சலுகைகள்? சாம்சங் கேலக்ஸி எஸ்25 மாடலின் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? இதோ விவரங்கள்:
சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் மீது அப்கிரேட் போனஸ் (Upgrade Bonus) மற்றும் கேஷ்பேக் ஆபரை (Cashback Offer) அறிவித்துள்ளது. எச்டிஎப்சி பேங்க் கார்டு வைத்திருப்பவர்கள் நேரடி கொள்முதலின் போது ரூ.10,000 பேங்க் கேஷ்பேக்கை பெறலாம். அல்லது சாம்சங் கேலக்ஸி எஸ்25 மாடலை வாங்க தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேன்ஜ் செய்ய விரும்புவோருக்கு ரூ.11,000 அப்கிரேட் போனஸும் கிடைக்கும்.

நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனின் 12GB + 128GB ஆப்ஷன் ரூ.74,999 க்கு அறிமுகமானது. ரூ.11,000 அப்கிரேட் போனஸின் கீழ் இந்த ஸ்மார்ட்போனின் விலையை ரூ.63,999 ஆகக் குறைக்க முடியும். ஆனால் இந்த சலுகை 12GB + 128GB மாடலுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பைனல் எக்ஸ்சேன்ஜ் போனஸ் தொகை உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் மேக், மாடல் மற்றும்கண்டிஷன் மற்றும் உங்கள் இடத்தில் இந்த சலுகையின் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து வேறுபாடும். ஒருவேளை உங்களிடம் எக்ஸ்சேன்ஜ் செய்ய ஸ்மார்ட்போன் இல்லை என்றால் ரூ.10,000 மதிப்புள்ள வங்கி கேஷ்பேக்கை பெறலாம்
சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள் (Samsung Galaxy S25 Edge Full Specifications): டிஸ்பிளேவை பொறுத்தவரை இது QHD+ ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2,600 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.7-இன்ச் AMOLED பேனலை கொண்டுள்ளது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 2 ப்ரொடெக்ஷனால் பாதுகாக்கப்படுகிறது.
சிப்செட்டை பொறுத்தவரை இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை கொண்டுள்ளது. இது மற்ற கேலக்ஸி எஸ்25 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் காணப்படும் அதே சிப் ஆகும். ஸ்டோரேஜை பொறுத்தவரை இது 256GB மற்றும் 512GB UFS 4.0 ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் 12GB LPDDR5x ரேம்-ஐ கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை பின்புறத்தில் 200MP ப்ரைமரி சென்சார் மற்றும் 12MP அல்ட்ராவைடு சென்சார் (மேக்ரோ மோட் உடன்) உள்ளது. முன்பக்கத்தில் 12MP செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொருத்தவ்ரு இது 25W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 3,900mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த சார்ஜிங் வேகத்தில் சுமார் 30 நிமிடங்களில் 55 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்று சாம்சங் கூறுகிறது.
சாஃப்ட்வேர்-ஐ பொறுத்தவரை இந்த போன் கேலக்ஸி ஏஐ அம்சங்களை கொண்ட ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ 7 உடன் வருகிறது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 163 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது மற்றும் ஐபி68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பிறகான ரேட்டிங்கை கொண்டுள்ளது. மேலும் 5ஜி, வைஃபை 7 மற்றும் ப்ளூடூத் 5.4, டைட்டானியம் அலாய் பிரேம் ஆகியவற்றுடன் வருகிறது.
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,09,999 என்றும், 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,21,999 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ப்ரீ-ஆர்டர் சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் 512ஜிபி மாறுபாட்டை 256ஜிபி விருப்பத்தின் விலையில் பெறலாம். அதாவது ரூ.12,000 தள்ளுபடியை பெறலாம்.


Click it and Unblock the Notifications








