அரிய வாய்ப்பு: ரூ.10,000 கேஷ்பேக் அறிவிப்பு- சாம்சங் இந்த மாடல் ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்!

|

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி எஸ்21+ தொடருக்கு மிகப் பெரிய தள்ளுபடியை அறிவித்துள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்21+ மாடல் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு தற்போது ரூ.10,000 கேஷ்பேக் சலுகையை வழங்குகிறது. ப்ரீமியம் பிளாக்ஷிப் மாடல்களாக இந்த ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்21+ மாடல்

சாம்சங் கேலக்ஸி எஸ்21+ மாடல்

சாம்சங் கேலக்ஸி எஸ்21+ மாடலை பொறுத்தவரை, தற்போது 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.71,999 ஆகவும் 256 ஜிபி வேரியண்ட் ரூ.75,999 ஆகவும் கிடைக்கிறது. கேலக்ஸி எஸ்21 தொடர் தற்போது சிறந்த கேஷ்பேக் சலுகையை வழங்குகிறது. இந்த சலுகைகளை பயன்படுத்தும் விதம் குறித்து பார்க்கையில் கேலக்ஸி பட்ஸ் ப்ரோ ரூ.15,990 ஆக இருந்த நிலையில் இந்த சலுகையின் மூலம் ரூ.990 ஆக வாங்கலாம், அல்லது சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா, சாம்சங் கேலக்ஸி எஸ் 21, சாம்சங் கேலக்ஸி எஸ் 21+ வாங்கும் போது ரூ.10,000 மதிப்புள்ள சாம்சங் ஷாப் வவுச்சரை பெறலாம். மூன்று கேலக்ஸி எஸ் 21 சாதனங்களும் இந்தியாவில் ஹைப்பர் ஃபாஸ்ட் 5ஜி தயார் நிலை அம்சத்தோடு இருக்கிறது.

கேஷ்பேக் மற்றும் உடனடி இஎம்ஐ விருப்பம்

கேஷ்பேக் மற்றும் உடனடி இஎம்ஐ விருப்பம்

கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா, கேலக்ஸி எஸ் 21 வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இது சிறந்த வாய்ப்பாகும். காரணம் இது முறையே ரூ.10,000 மற்றும் ரூ.5000 வரை மேம்படுத்தல் போனஸை பெறலாம். அதுமட்டுமின்றி இந்த சாதனங்கள் முறையே ரூ.10,000 மற்றும் ரூ.5,000 வங்கி கேஷ்பேக் சலுகையுடன் எச்டிஎஃப்சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட்கள் மூலம் எளிதான இஎம்ஐ விருப்பங்களை பெறலாம்.

சிறந்த மேம்பட்ட தரமான அம்சங்கள்

சிறந்த மேம்பட்ட தரமான அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா என்பது சிறந்த மேம்பட்ட தர அம்சங்களை கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா ரூ.104,999 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் 21 ரூ.69,999 என்ற விலையில் கிடைக்கிறது.

சலுகையோடு கிடைக்கும் தளங்கள்

சலுகையோடு கிடைக்கும் தளங்கள்

அனைத்து சலுகைகளும் தற்போதே நடைமுறையில் இருக்கிறது. ஜூன் 30, 2021 வரை சாம்சங் ஸ்டோர், சாம்சங்.காம், சாம்சங்.இன், சாம்சங் பிரத்யேக ஸ்டோர்ஸ், முன்னணி சில்லறை கடைகள் மற்றும் இ-காமர்ஸ் போர்ட்டல்கள் முழுவதும் செல்லுபடியாகும். சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எஸ் 21 தொடரில் ப்ரீமியம் ரக வடிவமைப்போடு சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா, சாம்சங் கேலக்ஸி எஸ் 21, சாம்சங் கேலக்ஸி எஸ்21+ ஆகிய சாதனங்களை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எஸ்21+ சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ்21+ சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ்21 தொடரில் இருக்கும் மூன்று சாதனங்களும் எக்ஸினோஸ் 2100 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகின்றன. சாம்சங் கேலக்ஸி எஸ்21 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்21+ ஆகிய இரண்டு மாடல்களும் மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. கேமரா அமைப்பை பொறுத்தவரை 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 12 மெகாபிக்சல் அகல கோண கேமரா மற்றும் 64 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் ஓஐஎஸ் ஆதரவுடன வருகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Announced Rs.10000 Cash Back For its Samsung Galaxy S21+ Smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X