Home
Mobile

அறிமுகமான 1 மாசத்துல.. இப்படி ஒரு ஆஃபர்-ஆ.. அப்போ இந்த 3 Samsung போனையும் நாமளும் வாங்கலாம் போலயே!

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட 1 மாத காலத்திற்குள், சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் 3 லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் மீது புதிய ஆஃபர்களை அறிவித்துள்ளது. அதென்ன போன்கள்? அவற்றின் விலை நிர்ணயம் என்ன? அவைகள் மீது அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகைகள் என்னென்ன? இதோ விவரங்கள்:

நாம் இங்கே பேசுவது சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரீஸ் போன்களை பற்றித்தான். நினைவூட்டும் வண்ணம் எஸ்23 சீரீஸின் கீழ் கேலக்ஸி எஸ்23 (Galaxy S23), கேலக்ஸி எஸ்23 பிளஸ் (Galaxy S23 Plus), கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா (Galaxy S23 Ultra) என்கிற 3 மாடல்கள் வாங்க கிடைக்கிறது. தற்போது இந்த 3 மாடல்கள் மீதும் புதிய ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கேலக்ஸி S23 சீரீஸ் மீது புதிய ஆஃபர்களை அறிவித்துள்ள Samsung!

சாம்சங் கேலக்சி எஸ்23 அல்ட்ரா மீதான புதிய சலுகைகள்

எஸ்23 சீரீஸின் மிக விலையுயர்ந்த மாடலான கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா மீது ரூ.18,000 மதிப்பிலான நன்மைகள் மற்றும் நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பங்கள் அணுக கிடைக்குமென்று சாம்சங் அறிவித்துள்ளது. மேலும் சாம்சங்கின் கூற்றுப்படி எஸ்23 அல்ட்ராவை மாதத்திற்கு வெறும் ரூ.5,209 செலுத்தி (24 மாதங்களுக்கான நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தின் கீழ்) சொந்தமாக்கி கொள்ளலாம். கூடுதலாக ரூ.10,000 என்கிற அப்கிரேட் போனஸும் கிடைக்கும்.

சாம்சங் கேலக்சி எஸ்23, எஸ்23 பிளஸ் மீதான புதிய சலுகைகள்

மறுகையில் உள்ள கேலக்ஸி எஸ்23 மற்றும் கேலக்ஸி எஸ்23 பிளஸ் மாடல்களை வாங்கினால் ரூ.13,000 மதிப்புள்ள நன்மைகள் மற்றும் நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பங்கள் அணுக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் 24 மாதங்களுக்கான நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தை தேர்வு செய்தால் மாதத்திற்கு ரூ.3,125 என்கிற செலவில் எஸ்23 அல்லது எஸ்23 பிளஸை சொந்தமாக்க முடியும். கூடுதலாக இந்த போன்களின் மீது ரூ.8,000 என்கிற அப்கிரேட் போனஸும் கிடைக்கும்.

சாம்சங் கேலக்சி எஸ்23 சீரீஸின் முக்கிய அம்சங்கள்

இந்த 3 ஸ்மார்ட்போன்களுமே ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 2) மூலம் இயக்கப்படுகின்றன மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஒன் யுஐ 5.0 (One UI 5.0) உடன் வருகின்றன. குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா மாடலானது மிகவும் மேம்படுத்தப்பட்ட கேமரா அம்சங்களுடன் வருகிறது; இது 200எம்பி அடாப்டிவ் பிக்சல் சென்சாரை (Adaptive Pixel sensor) பேக் செய்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள்

சாம்சங் கேலக்சி எஸ்23 8ஜிபி + 128ஜிபி - ரூ.74,999

சாம்சங் கேலக்சி எஸ்23 8ஜிபி + 256ஜிபி - ரூ.79,999

சாம்சங் கேலக்சி எஸ்23 பிளஸ் 8ஜிபி + 256ஜிபி - ரூ.94,999

சாம்சங் கேலக்சி எஸ்23 பிளஸ் 8ஜிபி + 512ஜிபி - ரூ.1,04,999

சாம்சங் கேலக்சி எஸ்23 அல்ட்ரா 12ஜிபி + 256ஜிபி - ரூ.1,24,999

சாம்சங் கேலக்சி எஸ்23 அல்ட்ரா 12ஜிபி + 256ஜிபி - ரூ.1,34,999

சாம்சங் கேலக்சி எஸ்23 அல்ட்ரா 12ஜிபி + 1டிபி - ரூ.1,54,999

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Announced New Offers On All The 3 Smartphones Under Galaxy S23 Series Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X