Home
Mobile

Samsung சம்பவம் செஞ்சிட்டான்.. மொத்த மார்க்கெட்டும் எதிர்பார்த்த புது 5ஜி போன்.. தாராள ஆபர் விலையில் விற்பனை!

ஒருவழியாக சாம்சங் (Samsung) நிறுவனமானது ஒட்டுமொத்த இந்திய மொபைல் மார்க்கெட்டும் எதிர்பார்த்த.. கேலக்ஸி எஸ்25 எப்இ 5ஜி (Galaxy S25 FE 5G) ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயத்தை அறிவித்து உள்ளது. கூடவே விற்பனை தேதி மற்றும் விற்பனை சலுகைகளையும் அறிவித்து உள்ளது.

நினைவூட்டும் வண்ணம் இது இந்த மாத தொடக்கத்தில், செப்டம்பர் 4 ஆம் தேதி அன்று நடந்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வின் போது உலகளவில் அறிமுகமானது. ஆனால் இந்திய விலை நிர்ணயம் அறிவிக்கப்படாமலேயே இருந்தது. தற்போது விலையும், விற்பனை தேதியும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Samsung: மொத்த மார்க்கெட்டும் எதிர்பார்த்த புது 5ஜி போன்!

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போன் நேவி, ஜெட்பிளாக் மற்றும் ஒயிட் ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.59,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.65,999 க்கும் மற்றும் 8ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.77,999 க்கும் வாங்க கிடைக்கும்

விற்பனை விவரங்கள்: சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சாம்சங்.காம் (Samsung.com), சாம்சங் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோர்ஸ் (Samsung Exclusive Stores), அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் முன்னணி ஆன்லைன் தளங்கள் வழியாக வருகிற செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கும்

விற்பனை சலுகைகளை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்குவதற்கான ரூ.12,000 மதிப்புள்ள ஸ்டோரேஜ் அப்கிரேட் கிடைக்கும். இதன்கீழ் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையில் 512ஜிபி ஆப்ஷனை வாங்கலாம். இதோடு ரூ.5,000 வங்கி கேஷ்பேக் மற்றும் 24 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் இஎம்ஐ ஆகிய சலுகைகளும் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 1,900 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ ப்ரொடெக்ஷன்
- விஷன் பூஸ்டர்
- 6.7-இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்பிளே

- எக்ஸினோஸ் 2400 சிப்செட்
- 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ 8
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா
- 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 12 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா

- 45W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 4,900mAh பேட்டரி
- எஸ்24 எப்இ மாடலை விட 10 சதவீதம் பெரிய வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக ஐபி68 ரேட்டிங்
- அளவீட்டில் 7.4 மிமீ தடிமன்
- எடையில் சுமார் 190 கிராம்

முன்னதாக இந்த ஸ்மார்ட்போனுடன் சேர்த்து அறிமுகமான சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட் டேப்லெட்டின் இந்திய விலை விவரங்களும் அறிவிக்கப்பட்டு இருந்தன. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இந்த டேப்லெட்டின் வைஃபை ஒன்லி வேரியண்ட் ஆனது ரூ.30,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. இதேபோல 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் வைஃபை வேரியண்ட் ஆனது ரூ.40,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.

ஒருவேளை நீங்கள் 5ஜி செல்லுலார் கனெக்டிவிட்டியை பெற விரும்பினால், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் வரும் மாடல் ரூ.35,999 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் டாப்-எண்ட் 5ஜி வேரியண்ட் ஆனது ரூ.45,999 க்கு வாங்க கிடைக்கும்

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Announced Galaxy S25 FE 5G India Price Offers Sale Date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X