Home
Mobile

Samsung-ன் அடிதூள் ஆஃபர்.. அறிமுக விலையை விட ரூ.5500 கம்மி.. அதுவும் A-Series 5G போன்கள் மீது.. என்ன மாடல்?

சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் இரண்டு ஏ-சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் மீது ரூ.5500 வரையிலான தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது. அதென்ன மாடல்கள்? அவைகளின் பழைய விலை என்ன? ஆஃபருக்கு பிறகான புதிய விலை நிர்ணயம் என்ன? அவைகளின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? இதோ விவரங்கள்:

அதென்ன மாடல்கள்? ரூ.5500 வரையிலான தள்ளுபடி சலுகைகளை பெற்றுள்ள இரண்டு ஏ-சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் - சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி (Samsung Galaxy A54 5G) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி (Samsung Galaxy A34 5G) மாடல்கள் ஆகும்.

Samsung-ன் அடிதூள் ஆஃபர்.. அதுவும் A-Series 5G போன்கள் மீது!

சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி மீதான தள்ளுபடி சலுகை: நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் இது ரூ.30,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதில் ரூ.1,500 வங்கி சலுகை (Bank Offer) மற்றும் ரூ.3,500 உடனடி தள்ளுபடி (Instant Discount) ஆகியவைகள் அடங்கும். இதேபோல 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி மீதான தள்ளுபடி சலுகை: தற்போது இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.33,499 க்கு விற்பனை செய்யப்படுகிறது, நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.38,999 ஆகும். இந்த சலுகை விதையில் ரூ.3,500 உடனடி கேஷ்பேக் மற்றும் ஆக்சிஸ் பேங்க் கார்டு பேமெண்ட்டுகளில் (Axis Bank card payments) ரூ.2,000 கேஷ்பேக் சலுகையும் (Cashback Offer) அடங்கும்.

Samsung-ன் அடிதூள் ஆஃபர்.. அதுவும் A-Series 5G போன்கள் மீது!

சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலை வாங்க விரும்புவோர், அதை ரூ.35,499 க்கு வாங்கலாம். மேற்கண்ட 2 கேலக்ஸி ஏ-சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் மீதான சலுகைகளும் சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதம் (Samsung Official Website) வழியாக அணுக கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி, கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள்: இரண்டுமே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஃபுல் எச்டி பிளஸ் (FHD+) ரெசல்யூஷன் உடனான சூப்பர் அமோஎல்இடி (Super AMOLED) டிஸ்பிளேக்களை கொண்டுளள்ன. சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி மாடலில் 6.4-இன்ச் டிஸ்பிளே உள்ளது; சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி மாடலில் சற்றே பெரிய 6.6-இன்ச் டிஸ்பிளே உள்ளது.

Samsung-ன் அடிதூள் ஆஃபர்.. அதுவும் A-Series 5G போன்கள் மீது!

இரண்டுமே ஆக்டா-கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகின்றன; 8ஜிபி வரையிலான ரேம்-ஐ கொண்டுள்ளன. கேமராக்களை பொறுத்தவரை எல்இடி ப்ளாஷ் உடன் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை பேக் செய்கின்றன. சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி மாடலில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilisation) ஆதரவுடன் 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் + 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் + 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி மாடலில் ஓஐஎஸ் (OIS) ஆதரவு உடனான 48எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ சென்சார் உள்ளது. முன்பக்கத்தில் 13எம்பி செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இரண்டுமே 5000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளன.

சாம்சங்கின் கூற்றுப்படி இவைகளை ஒருமுறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் பேட்டரி லைஃப்பை வழங்கும். மேலும் இரண்டு மாடல்களுமே ஐபி67 சான்றளிக்கப்பட்ட கட்டமைப்பை (IP67 Rating) கொண்டுள்ளன. டால்பி தொழில்நுட்பத்தால் ( Dolby Technology) மேம்படுத்தப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் (Stereo Speakers Enhanced) கொண்டுள்ளது. மேலும் இரண்டுலுமே நாக்ஸ் செக்யூரிட்டி சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Announced Discounts on Galaxy A54 5G and Galaxy A34 5G Check Offer Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X