Home
Mobile

எப்புட்றா.. இப்படிலாம் ஆஃபர் விடுறீங்க.. ரூ.9991 நேரடி தள்ளுபடி.. 14 மாதங்கள் நோ-காஸ்ட் EMI.. SAMSUNG அதிரடி!

சாம்சங் (Samsung) நிறுவனம் தனது கேலக்ஸி ஏ சீரிஸின் (Galaxy A Series) கீழ் வாங்க கிடைக்கும் 4 ஸ்மார்ட்போன்கள் மீது மெகா தள்ளுபடிகளையும், நம்ப முடியாத அளவிலான நோ-காஸ்ட் இஎம்ஐ (No-cot EMI) விருப்பங்களையும், கேஷ்பேக் ஆஃபர்களையும் அறிவித்து உள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் இந்த பண்டிகை கால ஆஃபரின் கீழ், என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும்? அவற்றின் பழைய மற்றும் புதிய விலை நிர்ணயம் என்ன? எத்தனை மாத காலத்திற்கு நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பம் கிடைக்கிறது? என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

எப்புட்றா.. இப்படிலாம் ஆஃபர் விடுறீங்க.. SAMSUNG அதிரடி!

01. சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி (Samsung Galaxy A14 5G): 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.18,499 ஆகும். இருப்பினும் இது, சாம்சங்கின் பண்டிகை கால ஆஃபரின் கீழ் ரூ.14,499 க்கு வாங்க கிடைக்கும்.

இந்த ஸ்மார்ட்போனின் மீது 8 மாத காலத்திற்கான நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பம் அணுக கிடைக்கிறது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5என்எம் ப்ராசஸர், 5000mAh பேட்டரி, 50MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் போன்றவைகளை கொண்டுள்ளது.

02. சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி (Samsung Galaxy A23 5G): 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.28,990 ஆகும். இருப்பினும் இது, சாம்சங்கின் பண்டிகை கால ஆஃபரின் கீழ் ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் மீதும் 8 மாத காலத்திற்கான நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பம் அணுக கிடைக்கிறது.

03. சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி (Samsung Galaxy A34 5G): 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.35,499 ஆகும். இருப்பினும் இது, சாம்சங்கின் பண்டிகை கால ஆஃபரின் கீழ் ரூ.25,999 க்கு வாங்க கிடைக்கும்.

இந்த ஸ்மார்ட்போனின் மீது 14 மாத காலத்திற்கான லோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பமும், 11 மாத லோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் அணுக கிடைக்கிறது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, ஐபி67 ரேட்டிங், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, டூயல் டால்பி ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் போன்றவைகளை கொண்டுள்ளது.

04. சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி (Samsung Galaxy A54 5G): 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.41,999 ஆகும். இருப்பினும் இது, சாம்சங்கின் பண்டிகை கால ஆஃபரின் கீழ் ரூ.33,499 க்கு வாங்க கிடைக்கும்.

இந்த ஸ்மார்ட்போனின் மீதும் 14 மாத காலத்திற்கான லோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பமும், 11 மாத லோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் அணுக கிடைக்கிறது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, ஐபி67 ரேட்டிங், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, 4 மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்ஸ், 5 வருட செக்யூரிட்டி அப்டேட்ஸ், 50எம்பி OIS மெயின் கேமரா போன்றவைகளை கொண்டுள்ளது.

மேற்கண்ட 4 ஸ்மார்ட்போன்களுமே வாய்ஸ் ஃபோகஸ் செயல்பாட்டை (Voice Focus Functionality) கொண்டுள்ளது, இந்த செயல்பாடானது பின்னணி இரைச்சலை குறைப்பதன் மூலம் தெளிவான அழைப்புகளை உறுதி செய்கிறது. இது நிகழ்நேர தரவுப் பாதுகாப்பிற்காக (Real-time data protection) சாம்சங்கின் நாக்ஸ் பாதுகாப்பு தளத்துடன் (Samsung's Knox Security Platform) பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Announced Discounts on Galaxy A14 5G Galaxy A23 5G Galaxy A34 5G Galaxy A54 5G
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X