சாம்சங்கின் ஆண்ட்ராய்டு வாட்ச் வந்தாச்சு...!

Written By:

சாம்சங் நிறுவனம் தற்போது புதிதாக ஒரு ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை வெளியிட்டுள்ளது அமெரிக்காவில்.

அதன் பெயர் கீர் லைவ்(Gear Live) என்பதாகும் இந்த வாட்ச் முழுக்க முழுக்க ஆண்ட்ராய்டு மூலம் இயங்குவதாகும்.

இந்த வாட்ச்சை நாம் கையில் அணிந்திருந்தால் நமது மொபைலி வரும் கால் மற்றும் மெசேஜே இதில் பார்க்கலாம் ரிப்ளே செய்யலாம்.

இந்த வாட்ச்சை எளிதில் நமது ஸ்மார்ட் போனுடன் கனெக்ட் செய்து கொள்ளலாம் மேலும் இந்த வாட்சில் மேப்ஸ்(Maps) உள்ளது.

சாம்சங்கின் ஆண்ட்ராய்டு வாட்ச் வந்தாச்சு...!

இதன்மூலம் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கான மேப்பினை வாட்ச்சில் கவனித்த படியே நாம் செல்லலாம்.

இதில் ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு நாள் முழுவதும் வரும் மேலும் நமது இதயத்துடிப்பை இந்த வாட்ச் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

இதன் விலை 200 அமெரிக்க டாலர்களாகும் இது தற்போதைக்கு அமெரிக்காவில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது விரைவில் உலகம் முழுவதும் இதை வெளியிட இருக்கிறது சாம்சங்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot