இரவோடு இரவாக லிஸ்ட்டு பெருசாகிட்டே போகுது.. Samsung போன் ஓனர்களே உடனே Settings போங்க!
கொஞ்சம் பழைய மாடலாக இருந்தாலும் சரி.. அல்லது லேட்டஸ்ட் மாடலாக இருந்தாலும் சரி.. உங்களிடம் சாம்சங் (Samsung) நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் ஒன்று இருந்தால், அந்த போனில் உள்ள செட்டிங்ஸ் ஆப்பை (Settings App) செக் செய்து பார்க்க வேண்டிய நேரம் இது! ஏன்? எதற்காக? இதோ விவரங்கள்:
ஏன் செட்டிங்ஸ் ஆப்பை செக் செய்ய வேண்டும்? ஏனென்றால், சாம்சங் நிறுவனமானது தனது ஸ்மார்ட்போன்களுக்கு புயல் வேகத்தில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அப்டேட்டை வெளியிட்டு கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டின் இந்த லேட்டஸ்ட் ஆப்ரேட்டிங் சிஸ்டம் எந்தெந்த சாம்சங் போன்களுக்கு வந்துள்ளது? எந்தெந்த மாடல்களுக்கு கூடிய விரைவில் வந்து சேரும்? என்கிற பட்டியல் இதோ:

எந்தெந்த மாடல்களுக்கு வந்துள்ளது? சில நாடுகளில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அப்டேட்டை பெற்ற சாம்சங் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் கேலக்ஸி ஏ54 (Galaxy A54), கேலக்சி எஸ்23 எஃப்இ (Galaxy S23 FE), கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 (Galaxy Z Flip 5) மற்றும் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 (Galaxy Z Fold 5) ஆகியவைகள் ஏற்கனவே சேர்ந்துவிட்டன.
மேலும் கேலக்ஸி எஸ்23 (Galaxy S23) மற்றும் கேலக்ஸி எஸ்22 (Galaxy S22) சீரீஸ் ஸ்மார்ட்போன்களும்கூட ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வெர்ஷனை பெற்ற ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் சேர்ந்து விட்டன. வரும் வாரங்களில் இந்தியா போன்ற பல்வேறு நாடுகளுக்கும் இந்த அப்டேட் வரும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

எந்தெந்த மாடல்களுக்கு விரைவில் அப்டேட் கிடைக்கும்? விரைவில் கேலக்ஸி ஏ52 (Galaxy A52), கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி (Galaxy A52s 5G), கேலக்ஸி எஸ்21 எஃப்ஐ 5ஜி (Galaxy S21 FE 5G), கேலக்ஸி ஏ72 (Galaxy A72) போன்ற மாடல்கள் விரைவில் புதிய அப்டேட்டை பெறும்.
அதனை தொடர்ந்து கேலக்ஸி ஏ13 (Galaxy A13), கேலக்ஸி ஏ23 5ஜி (Galaxy A23 5G), கேலக்ஸி இஸட் ஃபிளிப் 3 (Galaxy Z Flip 3) மற்றும் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 3 (Galaxy Z Fold 3) போன்ற மாடல்களுக்கும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அப்டேட்டை வந்துசேரும்.

பின்னர் கேலக்ஸி ஏ04எஸ் (Galaxy A04s), கேலக்ஸி எக்ஸ்கவர் 5 (Galaxy XCover 5) மற்றும் கேலக்ஸி ஏ25 5ஜி (Galaxy A25 5G) போன்ற ஸ்மார்ட்போன்கள் வருகிற டிசம்பர் மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வாரங்களில் லேட்டஸ்ட் ஆண்ட் ராய்டு 14 ஓஎஸ் அப்டேட்டை பெறலாம்.
மேற்கண்ட எல்லா மாடல்களுமே ஸ்டாண்டர்ட் ஆண்ட்ராய்டு 14 கட்டமைப்புடன் சாம்சங்கின் லேட்டஸ்ட் ஒன் யுஐ 6 வழியாக பல புதிய அம்சங்களையும் பெறும். நினைவூட்டும் வண்ணம் ஒன் யுஐ 6 ஆனது குவிக் செட்டிங்ஸ் பேனல் (Quick settings panel), சாம்சங் டெக்ஸ் (Samsung DeX) போன்ற அம்சங்களை கொண்டு வருகிறது.
மேலும் ஒன் யுஐ 6 ஆனது லாக் ஸ்க்ரீன் கஸ்டமைசேஷன் (Lock screen customization), மேம்படுத்தப்பட்ட கேமரா கட்டுப்பாடுகள் (Improved camera controls) போன்ற அம்சங்களையும் வழங்கும். கூடுதலாக, பயனர்கள் சாம்சங் கீபோர்டில் புதிய விட்ஜெட்கள் (New Widgets) மற்றும் புதிய ஈமோஜி ஸ்டைலையும் (Emoji style) எதிர்பார்க்கலாம்.
சாம்சங் ஸ்மார்ட்போன்களை வைத்து இருக்கும் பயனர்கள் மற்றும் லேட்டஸ்ட் ஒன் யுஐ 6-க்கு அப்டேட் ஆக விரும்பும் சாம்சங் போன் உரிமையாளர்கள், தங்கள் போன்களில் உள்ள செட்டிங்ஸ் ஆப்பிற்கு செல்வதன் மூலம் கைமுறையாக ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அப்டேட்டை சரி பார்க்கலாம் மற்றும் இன்ஸ்டால் செய்யலாம்.
அப்டேட் செய்வதற்கு முன், உங்கள் ஸ்மார்ட்போனில் 50 சதவீத பேட்டரி சார்ஜ் மற்றும் நிலையான வைஃபை அல்லது செல்லுலார் கனெக்டிவிட்டி இருப்பதை உறுதி செய்துகொள்ளவும். பின்னர் செட்டிங்ஸ் > சாஃப்ட்வேர் அப்டேட் செல்லவும். லேட்டஸ்ட் அப்டேட் இருந்தால் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.


Click it and Unblock the Notifications