சாம்சங் மற்றும் எல்ஜியின் புதிய டெக்னாலஜி!!!
ஒவ்வொரு முன்னனி மொபைல் நிறுவனங்களும் தங்கள் ஒரு புதுமைகளை படைக்க விரும்புகின்றனர். புதிதாக எதாவது செய்தால் தான் மக்களை கவர முடியும் என்பது ஒரு பக்க உண்மை. அண்மையில் கூட ஆப்பிள் நிறுவனம் தான் வெளியிட்ட ஐபோனில் பிங்கர் பிரின்ட் ஸ்கேனிங் என்ற புதிய டெக்னாலஜியை புகுத்தியது.
இப்பொழுது அனைத்து முன்னனி மொபைல் நிறுவனங்களும் கர்வ் (curve) டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதில் மும்மரமாக உள்ளனர். சாம்சங் மற்றும் எல்ஜி இந்த இரண்டு நிறுவனங்களும் இந்த மாடல் ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதில் முன்னோடிகளாக உள்ளனர்.
இந்த இரண்டு நிறுவனங்களும் விரைவில் கர்வ் மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட உள்ளனர் . இதை பற்றிய மேலும் சில தகவல்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.
புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

#1
சாம்சங் வெளியிட இருக்கும் கர்வ் மாடல் ஸ்மார்ட்போனின் பெயர் சாம்சங் கேலக்ஸி நோட் 3 ஆக்டிவ் ஆகும்.

#2
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ் 5யையும் கர்வ் டிஸ்பிளே டெக்னாலஜியுடன் உருவாக்கும் என தெரிகிறது.

#3
சாம்சங் கேலக்ஸி எஸ்5 2014ன் தொடக்கத்தில் வெளிவரும் என்று தெரிகிறது. ஆனால் அதற்க்கு முன்பே இம்மாதத்தில் சாம்சங் கேலக்ஸி நோட் 3 வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#4
கர்வ் டிஸ்பிளே ஸ்மார்ட்போன்கள் வெளிவந்துவிட்டால் அதன் பின் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் பல புதிய டிஸைனில் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.

#5
சாம்சங்கிற்க்கு முன்னரே எல்ஜி நிறுவனம் கர்வ் டிஸ்பிளே ஸ்மார்ட்போனை பற்றிய அறிவிப்பை வெளியிட்டது.

#6
இந்நிறுவனம் பெர்லினில் நடந்த IFA 2013 வர்த்தக விழாவில் கர்வ் டிஸ்பிளே கொண்ட டிவியை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

#7
எல்ஜி நிறவனத்தின் கர்வ் டிஸ்பிளே ஸ்மார்ட்போனின் பெயர் எல்ஜி Z ஆகும்.

#8
எல்ஜி Z ஸ்மார்ட்போனின் உற்பத்தி பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனும் இம்மாதத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications