அங்கே கடைய சாத்திட்டு.. இங்கே 60% வரை, ரூ.25000 வரை தள்ளுபடி.. Samsung போன், TV, லேப்டாப் மீது ஆபர் மழை!
சாம்சங் (Samsung) நிறுவனமானது சீனாவில் அதன் ஸ்மார்ட் டிவிகள் உட்பட அதன் பெரும்பாலான வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ள வேகத்தில் இந்திய சந்தையில் தொடர்ச்சியான (விற்பனையை அதிகரிக்கும் தொடர்பான) நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முதலில் தனது 2026 மினி எல்இடி டிவி சீரீஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருந்தது. பின்னர் சாம்சங் கேலக்ஸி ஏ2 5ஜி (Samsung Galaxy A27 5G) ஸ்மார்ட்போனின் அறிமுகம் குறித்த லீக்ஸ் வெளியாகி இருந்தது. அதை தொடர்ந்து, சாம்சங் நிறுவனமானது சர்டிஃபைட் ரீ-நியூடு (Certified Re-Newed) என்கிற திட்டத்தை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி இருந்தது.

இப்போது, சாம்சங் நிறுவனம் ஆனது சாம்சங் ஏஐ வீக் 2026 (Samsung AI Week 2026) என்ற தனது பிளாக்ஷிப் சேல் நிகழ்வை (Flagship Sale Event) அறிவித்துள்ளது. மே 10 ஆம் தேதி தொடங்கிய இந்த விற்பனையானது, ஏதேனும் ஒரு வகையில் ஏஐ-ஐ பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கான டீல்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கான சலுகைகள்: சாம்சங் நிறுவனம் பல்வேறு விலை வரம்புகளில் உள்ள ஏராளமான ஸ்மார்ட்போன்களுக்கு எம்ஆர்பி-யில் 36 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. மேலும், வாங்குபவர்கள் ஒரு கேலக்ஸி ஸ்மார்ட்போனை வாங்கும்போது ரூ.25,000 வரை உடனடி வங்கி தள்ளுபடியையும் பெற முடியும்.
சிறந்த தள்ளுபடிகளை பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா, கேலக்ஸி எஸ்26, கேலக்ஸி எஸ்26 பிளஸ், கேலக்ஸி இஸட் ஃபோல்ட்7, கேலக்ஸி இஸட் ஃபிளிப்7, கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா, கேலக்ஸி எஸ்25, கேலக்ஸி எஸ்25 எட்ஜ், கேலக்ஸி எஸ்25 எப்இ, கேலக்ஸி ஏ57, கேலக்ஸி ஏ56, கேலக்ஸி ஏ37, கேலக்ஸி ஏ36, கேலக்ஸி ஏ17, கேலக்ஸி ஏ07, கேலக்ஸி எம்17 மற்றும் கேலக்ஸி எம்36 ஆகிய மாடல்கள் உள்ளன
சாம்சங் லேப்டாப்களுக்கான சலுகைகள்: சாம்சங் ஏஐ வீக் விற்பனையில் கேலக்ஸி புக்ஸ் லேப்டாப்களை எம்ஆர்பி-இல் இருந்து 37 சதவீதம் வரை தள்ளுபடியில் பெறலாம். மேலும், பேங்க் கார்டுகளை பயன்படுத்தி கூடுதலாக ரூ.5,000 உடனடி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
இந்த தள்ளுபடி ஆனது சாம்சங் கேலக்ஸி புக்6, கேலக்ஸி புக்6 ப்ரோ, கேலக்ஸி புக்6 அல்ட்ரா, கேலக்ஸி புக்5 ப்ரோ 360, கேலக்ஸி புக்5 ப்ரோ, கேலக்ஸி புக்5 360, கேலக்ஸி புக்5 மற்றும் கேலக்ஸி புக்4 ஆகிய மாடல்களுக்கு கிடைக்கிறது.
சாம்சங் ஸ்மார்ட் டிவிகளுக்கான சலுகைகள்: இதன்கீழ் சாம்சங் ஸ்மார்ட் டிவிகள் ஆனது எம்ஆர்பி விலையில் 55 சதவீதம் தள்ளுபடியில் கிடைப்பது மட்டுமல்லாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட டிவிகளுக்கு இலவச சவுண்ட்பாரும், ஃபிரேம் டிவிகளை வாங்கும் போது இலவச பெசலும் கிடைக்கும் என்று சாம்சங் அறிவித்துள்ளது
சாம்சங்கின் இந்த சலுகையை மேலும் இனிமையாக்க, ரூ.5,000 மதிப்புள்ள எக்ஸ்சேஞ்ச் போனஸ்களும் வழங்கப்படுகின்றன. இதன்கீழ் விற்பனைக்கு உள்ள சாம்சங் டிவிகளில் 43-இன்ச் UE81F கிரிஸ்டல் யுஎச்டி டிவி, 55-இன்ச் QEF1 க்யூஎல்இடி டிவி, 55-இன்ச் Q8F க்யூஎல்இடி டிவி, 65-இன்ச் LS03F ஃபிரேம் டிவி மற்றும் 65-இன்ச் QN70F நியோ க்யூஎல்இடி டிவி ஆகியவைகள் அடங்கும்.
டேப்லெட்டுகள், ஆக்சஸெரீஸ்கள் மற்றும் வியரிபிள்ஸ் மீதான சலுகைகள்: இவைகள் எம்ஆர்பி-இல் 60 சதவீதம் தள்ளுபடி மற்றும் பேங்க் கார்டுகளை பயன்படுத்தி செய்யப்படும் வாங்குதல்களுக்கு ரூ.5,000 உடனடி தள்ளுபடி உடன் வாங்க கிடைக்கிறது.இந்த சலுகைகள் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்11 அல்ட்ரா, கேலக்ஸி டேப் எஸ்11, கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ பிளஸ், கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ, கேலக்ஸி டேப் எஸ்10 லைட், கேலக்ஸி டேப் ஏ11 பிளஸ், கேலக்ஸி டேப் ஏ11 ஆகிய டேப்லெட் மாடல்களில் கிடைக்கின்றன.
மேலும் கேலக்ஸி வாட்ச்8 கிளாசிக், கேலக்ஸி வாட்ச்8, கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா, கேலக்ஸி பட்ஸ்4 ப்ரோ, கேலக்ஸி பட்ஸ்4, கேலக்ஸி பட்ஸ்3 ப்ரோ, கேலக்ஸி பட்ஸ்3 மற்றும் கேலக்ஸி பட்ஸ் கோர் ஆகிய ஸ்மார்ட் வாட்ச் மாடல்களின் மீதும் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications