இந்தியாவில் சாம்சங் ஏ8+ (2018) : எப்போது.? எங்கு.? என்னென்ன அம்சங்கள்.?

|

சாம்சங் நிறுவனத்தின் ஏ8+ ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை உறுதி செய்யும் வண்ணம் "மிக விரைவில்" என்ற விளம்பர பலகையுடன் இக்கருவியானது பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் சாம்சங் ஏ8+ (2018) : எப்போது.? எங்கு.? என்னென்ன அம்சங்கள்?

சாம்சங் ஏ8 ப்ளஸ் ஆனது கடந்த 2017 டிசம்பரில், சாம்சங் நிறுவனத்தின் ஏ8 (2018) ஸ்மார்ட்போனுடன் இணைந்து, பிளாக், ஆர்க்கிட் சாம்பல், தங்கம் மற்றும் ப்ளூ ஆகிய வண்ண விருப்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜனவரி 10-ஆம் தேதி முதல்

ஜனவரி 10-ஆம் தேதி முதல்

தற்போது வெளியாகியுள்ள அறிக்கைகளின் படி, சாம்சங் ஏ8+ (2018) மாடல் ஆனது வருகிற ஜனவரி 10-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று அறியப்படுகிறது. ஆனால் அமேசான்இந்தியா தளம் வழியாக எப்போது விற்பனை தொடங்கும் என்பது பற்றிய தேதி அறிவிக்கப்படவில்லை.

டிஸ்பிளே

டிஸ்பிளே

சாம்சங் ஏ8+ ஸ்மார்ட்போன் ஆனது பிரீமியம் கண்ணாடி மற்றும் உலோக வடிவமைப்புடன் வருகிறது. அதன் பெரிய 6 அங்குல அமோஎல்இடி டிஸ்பிளே ஆனது 18.5: 9 என்கிற திரை விகிதம் கொண்ட ஒரு முழு எச்டி டிஸ்பிளேவாகும்.

கேமரா

கேமரா

கேமரத்துறையை பொறுத்தமட்டில் இக்கருவி, 16 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் என்கிற இரட்டை முன்பக்க கேமரா அமைப்பை கொண்டுள்ளது. மேலும் இது 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் செயலி மற்றும் 4ஜிபி ரேம் மூலம் இயக்கப்படுகிறது.

சேமிப்பு

சேமிப்பு

சாம்சங் கேலக்ஸி ஏ8+ (2018) ஆனது இரண்டு கட்டமைப்புகளில் வருகிறது: 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு, மற்றும் 6 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரிகளில் வெளியாகும். உடன் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 256 ஜிபி வரை நினைவகத்தை விரிவாக்கும் ஆதரவும் உண்டு.

பேட்டரி

பேட்டரி

அளவீட்டில் கேலக்ஸி ஏ8+ ஆனது 159.9 x 75.7 x 8.3 மிமீ மற்றும் 191 கிராம் எடையும் கொண்டுள்ளது. ஒரு 3500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் கேலக்ஸி ஏ8+ (2018) ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்குகிறது.

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில் என்எப்சி, எம்எஸ்டி, 4ஜி எல்டிஇ, வைஃபை, விஎச்டி80, 256க்யூஏஎம், ப்ளூடூத் வி 5.0, ஏன்ட் ப்ளஸ், யூஎஸ்பி டைப்-சி, ஜி.பி.எஸ், குளோனாஸ், பீடியூ மற்றும் இரட்டை சிம் ஸ்லாட் ஆகியவைகளை தன்னுள் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung A8+ launching in India soon. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X