Home
Mobile

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த புதிய வண்ணத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன்!

By Saravana Rajan

பட்ஜெட் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ வரிசையில் புதிய மாடல்களை சாம்சங் களமிறக்கியது. இதில், கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன் அதிக வரவேற்பை பெற்ற மாடலாக விளங்குகிறது.

புதிய வண்ண தேர்வு

புதிய வண்ண தேர்வு

இந்த ஸ்மார்ட்போனில் இருந்த சில பிரச்னைகள் வாடிக்கையாளர்களின் கருத்துக்களின் பேரில் சரிசெய்யப்பட்டது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் மற்றொரு கோரிக்கையாக இருந்த வெள்ளை வண்ண தேர்விலும் இப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விலை விபரம்

விலை விபரம்

சாம்சங் கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்போது ரூ.16,990 விலையாக நிர்ணயிக்கப்பட்டது. சந்தைப் போட்டி காரணமாக, கடந்த மாதம் ரூ.1,500 வரை விலை அதிரடியாக குறைக்கப்பட்டது. தற்போது ரூ.15,490 விலையில் கிடைக்கிறது. இதே விலையிலேயே தற்போது வெள்ளை வண்ண தேர்வும் கிடைக்கும்.

எச்டி ப்ளஸ் திரை

எச்டி ப்ளஸ் திரை

சாம்சங் கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போனில் 6.4 அங்குல முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் தொடு திரை கொடுக்கப்பட்டுள்ளது. கேமரா நாட்ச் திரை அமைப்புடன் நவீன ஸ்மார்ட்போன் ரகத்தில் அதிகபட்ச திரை அளவை பெற்றிருப்பது இதன் முக்கிய சிறப்பாக இருக்கிறது.

பிராசஸர்

பிராசஸர்

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 7904 எஸ்ஓசி பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் கிடைக்கிறது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலமாக ஸ்டோரேஜ் திறனை 512 ஜிபி வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.

கேமரா

கேமரா

பின்புறத்தில் 16 எம்பி மற்றும் 5 எம்பி திறன் கொண்ட இரண்டு கேமராக்கள் உள்ளன. முன்புறத்தில் 16 எம்பி செல்ஃபீ கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கொடுக்கப்பட்ட அப்டேட் மூலமாக ஸ்லோமோஷன் ஆப்ஷனை இந்த கேமரா பெற்றிருக்கிறது.

பேட்டரி

பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போனில் 4,000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி உள்ளது. 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜர் வசதியுடன் இது கிடைப்பது மற்றொரு சிறப்பம்சம். இந்த போனில் டைப் சி போர்ட் சப்போர்ட் வசதியும் இருக்கிறது.

சாம்சங் மதிப்பு

சாம்சங் மதிப்பு

புதிய வெள்ளை வண்ணத்தை தவிர்த்து, கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு வண்ணங்களிலும் கிடைக்கிறது. பட்ஜெட் விலையில் சிறந்த ஸ்மார்ட்போன் மாடலாக சாம்சங் ஏ30 விளங்குகிறது. ரெட்மி நோட் 7 ப்ரோ உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடுகிறது. ஆனால், சாம்சங் பிராண்டு மதிப்பு மற்றும் தரம் இதனை முன்னிறுத்தும் அம்சமாக கூறலாம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A30 smartphone has received a White colour option in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X