Samsung நிறுவனத்திடம் பட்ஜெட் விலையில் என்னென்ன 5G போன் இருக்கு: வாங்க பார்க்கலாம்.!
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகமானதும் சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது.

சாம்சங் 5ஜி
அதேபோல் சீன நிறுவனங்களின் 5ஜி போன்களை வாங்குவதை விட சாம்சங் நிறுவனத்தின் 5ஜி போன்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம்
காட்டுகின்றனர் என்றுதான் கூறவேண்டும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த சாம்சங் 5ஜிஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.13,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த போன் 6.5-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி அம்சங்கள்
அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போன் மென்மையான செயல்திறனை வழங்கும் மீடியாடெக் டைமென்சிட்டி 700 சிப்பையும் கொண்டுள்ளது.பின்பு 50எம்பி டூயல் ரியர் கேமரா, 5எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளதுஇந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.17,189-விலையில் வாங்க
முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி அம்சங்கள்
அதாவது குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 5000 எம்ஏஎச் பேட்டரி, 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் போன்.
மேலும் இந்த போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,999-ஆக உள்ளது. மேலும் இந்த போன் எக்ஸ்நோஸ் 1280 ஆக்டோ-கோர் பிராசஸர், 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே, 6000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த போன் 50எம்பி குவாட்-ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இதன் மூலம் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை
எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி
அமேசான் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,999-ஆக உள்ளது.
பின்பு Dimensity 720 பிராசஸர், 5000 எம்ஏஎச் பேட்டரி, 6.5-இன்ச் டிஸ்பிளே, 48எம்பி குவாட் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா உள்ளிட்டபல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,980-ஆக உள்ளது. இந்த போன் 6.6-இன்ச்டிஸ்பிளே, 48எம்பி குவாட்-ரியர் கேமரா அமைப்பு, 8எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, MT6833V Octa Core பிராசஸர் உள்ளிட்ட
பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications