Price Cut-னா இப்படி இருக்கணும்! இரவோடு இரவாக ரூ.10,000 விலை குறைந்த Samsung போன்!

|

சாம்சங் நிறுவனம் (Samsung) அதன் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது "பொசுக்குன்னு" ரூ.10,000 என்கிற விலைக்குறைப்பை (Price Cut) அறிவித்துள்ளது.

அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் பழைய மற்றும் புதிய விலை நிர்ணயம் என்ன? ரூ.10,000 என்கிற Price Cut-க்கு பின்பும் கூட அதை நம்பி வாங்கலாமா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

அதென்ன ஸ்மார்ட்போன்?

அதென்ன ஸ்மார்ட்போன்?

சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை கேலக்ஸி எஸ்23 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

அதனொரு பகுதியாக, இந்நிறுவனம் அதன் கேலக்ஸி S22 ஸ்மார்ட்போனின் விலையை "தாறுமாறாக" குறைத்துள்ளது. நினைவூட்டும் வண்ணம், கேலக்ஸி எஸ்22 ஆனது இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

திடீரென ரூ.4000 க்கும்.. ரூ.5000 க்கும் விற்கப்படும் 12 Redmi போன்கள்.. இதோ முழு லிஸ்ட்!திடீரென ரூ.4000 க்கும்.. ரூ.5000 க்கும் விற்கப்படும் 12 Redmi போன்கள்.. இதோ முழு லிஸ்ட்!

இரண்டின் மீதும் ரூ.10,000 விலைக்குறைப்பு!

இரண்டின் மீதும் ரூ.10,000 விலைக்குறைப்பு!

முன்னரே குறிப்பிட்டபடி, Samsung Galaxy S22 ஆனது தற்போது ரூ.10,000 என்கிற "நம்ப முடியாத" விலைக் குறைப்பை பெற்றுள்ளது.

இன்னொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால், இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளின் கீழ் வருகிறது மற்றும் அந்த இரண்டுமே ரூ.10,000 என்கிற விலைக் குறைப்பை பெற்றுள்ளன.

பழைய விலை VS புதிய விலை:

பழைய விலை VS புதிய விலை:

சாம்சங் Galaxy S22 ஸ்மார்ட்போன் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளின் கீழ் வாங்க கிடைக்கிறது: அது 8GB + 128GB மற்றும் 8GB + 256GB ஆகும்.

அவைகள் முறையே ரூ.72,999 மற்றும் ரூ.76,999 க்கு வாங்க கிடைத்தன. ஆனால் ரூ.10,000 விலைக் குறைப்புக்கு பிறகு, 128ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ.62,999 க்கும் மற்றும் 256ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ.66,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

1 இல்ல 2 இல்ல.. நச்சுனு 9 புதிய Phone-கள்! இந்த நவம்பர் மாதம் - நல்ல போன்களுக்கான மாதம்!1 இல்ல 2 இல்ல.. நச்சுனு 9 புதிய Phone-கள்! இந்த நவம்பர் மாதம் - நல்ல போன்களுக்கான மாதம்!

விலைக்குறைப்பு மட்டுமல்ல இன்னும் இருக்கிறது!

விலைக்குறைப்பு மட்டுமல்ல இன்னும் இருக்கிறது!

பாண்டம் ஒயிட், பாண்டம் பிளாக் மற்றும் க்ரீன் என்கிற 3 கலர் ஆப்ஷன்களின் கீழ் விற்பனை செய்யப்படும் எஸ்22 மீது ரூ.10,000 என்கிற ப்ரைஸ் கட் மட்டுமல்ல, வேறு சில சலுகைகளும் அணுக கிடைக்கிறது!

இந்த ஸ்மார்ட்போனை, சாம்சங் ஷாப் ஆப் வழியாக நீங்கள் வாங்கும் பட்சத்தில் ரூ.2,000 வரையிலான வெல்கம் பெனிஃபிட்டை பெறுவீர்கள்.

மேலும் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் அனைவருமே, ஆறு மாத காலத்திற்கு 100ஜிபி அளவிலான ஒன்ட்ரைவ் (OneDrive) கிளவுட் ஸ்டோரேஜையும் இலவசமாகப் பெறுவார்கள்.

யாரெல்லாம் வாங்கலாம்,, யாரெல்லாம் வாங்க வேண்டாம்!

யாரெல்லாம் வாங்கலாம்,, யாரெல்லாம் வாங்க வேண்டாம்!

நிறை குறைகளை பற்றி பேசும் போது, முதலில் யாரெல்லாம் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம் என்பதை பற்றி பாப்போம்.

நீங்களொரு போட்டோகிராஃபி லவ்வர் என்றால், கண்களை மூடிக்கொண்டு நீங்கள் வாங்கும் ஸ்மார்ட்போன்களில் எஸ்22 மாடலும் ஒன்றாகும்.

ஏனென்றால் இதன் கேமரா செட்டப் மிகவும் வலுவானதாக உள்ளது, அற்புதமான புகைப்படங்களை கைப்பற்றுவதில் கில்லாடியாக உள்ளது.

உங்கள நம்பி 5G போன் வாங்குனதுக்கு.. நல்லா வச்சி செஞ்சிட்டீங்க! கதறும் Jio, Airtel வாசிகள்! ஏன்?உங்கள நம்பி 5G போன் வாங்குனதுக்கு.. நல்லா வச்சி செஞ்சிட்டீங்க! கதறும் Jio, Airtel வாசிகள்! ஏன்?

டிசைன் மற்றும் பெர்ஃபார்மென்ஸ்

டிசைன் மற்றும் பெர்ஃபார்மென்ஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஆனது நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும் என்பதால், இதன் டிசைனில் ஒரு குறையையும் உங்களால் கண்டுபிடிக்க முடியாது.

அதே போல பெர்ஃபார்மென்ஸ் என்று வரும் போதும் கூட, இந்த ஸ்மார்ட்போன் உங்களை நிச்சயம் இம்ப்ரெஸ் செய்யும். ஆக தரமான கேமரா, ஸ்டைலான டிசைன் மற்றும் வெயிட்டான பெர்ஃபார்மென்ஸ் தான் - உங்களின் 3 முக்கிய தேவைகள் என்றால் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனை நீங்கள் நம்பி வாங்கலாம்!

குறைகளை பொறுத்தவரை..

குறைகளை பொறுத்தவரை..

சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஆனது சொல்லிக் கொள்ளும்படியான பேட்டரி லைஃப்-ஐ வழங்கவில்லை. எனவே லாங் லாஸ்டிங் பேட்டரி லைஃப்-ஐ தேடும் எவருக்குமே இந்த ஸ்மார்ட்போனை நாங்கள் பரிந்துரைக்க மாட்டோம்.

அதே போல், எஸ்22 ஆனது அளவில் சற்றே சிறியதாக இருப்பதால், பெரிய கைகளை கொண்டவர்களுக்கு இது பொருத்தமில்லாத ஒரு ஸ்மார்ட்போனாக மாறவும் வாய்ப்பு உள்ளது, இதை தவிர்த்து, இந்த ஸ்மார்ட்போனில் வேறு எந்த பெரிய குறைகளையும் சுட்டிக்காட்ட முடியாது!

கேப்புல நடந்த கிடா வெட்டு! Elon Musk அசந்த நேரம் பார்த்து ISRO செய்த கேப்புல நடந்த கிடா வெட்டு! Elon Musk அசந்த நேரம் பார்த்து ISRO செய்த "அடேங்கப்பா" வேலை!

சாம்சங் கேலக்ஸி S22: என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது?

சாம்சங் கேலக்ஸி S22: என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது?

- இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும் 6.1 இன்ச் அளவிலான FHD+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

- முன்னரே குறிப்பிட்டபடி, இது இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் வருகிறது: 128GB மற்றும் 256GB.

- இது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட நிறுவனத்தின் சொந்த லேயரான One UI-ஐ கொண்டு இயக்கப்படுகிறது.

எத்தனை கேமராக்கள்.. என்னென்ன சென்சார்கள்?

எத்தனை கேமராக்கள்.. என்னென்ன சென்சார்கள்?

- இது ட்ரிபிள் ரியர் கேமராக்களை பேக் செய்கிறது.

- அதில் 50MP மெயின் சென்சார் + 12MP அல்ட்ரா-வைட் சென்சார் + 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளது.

- முன்பக்கத்தை பொறுத்தவரை, இதில் 10எம்பி செல்பி கேமரா உள்ளது.

இதன் பேட்டரி கேப்பாசிட்டி எவ்வளவு?

இதன் பேட்டரி கேப்பாசிட்டி எவ்வளவு?

- மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது IP68 மதிப்பீட்டுடன் வருகிறது, அதாவது தூசி மற்றும் நீர்-எதிர்ப்புத் திறனை கொண்டுள்ளது

- கடைசியாக 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடனான 3,700mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung 2022 Flagship Smartphone Galaxy S22 gets Rs 10000 Price Cut in India who can buy

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X