கறுப்பு நிறத்தில் அவதாரம் எடுக்கும் கேலக்ஸி எஸ்-3!

Posted By: Staff
கறுப்பு நிறத்தில் அவதாரம் எடுக்கும் கேலக்ஸி எஸ்-3!

உலகளவில் ஸ்மார்ட்போன் சந்தைகளில் அனைவரையும திரும்பி பார்க்க வைத்த கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை இப்போது கறுப்பு நிறுத்திலும் அறிமுகம் செய்கிறது சாம்சங் நிறுவனம்.

பெபில் ப்ளூ மற்றும் மார்பில் வைட் என்று கண்களுக்கு இதமாக இருக்கும் வண்ணம் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை வழங்கிய சாம்சங் நிறுவனம், கறுப்பு நிறத்திலும் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை வழங்க உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

கேலக்ஸி எஸ்-3 என்ற ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்போன் மார்கெட்டில் மட்டும் அல்லாமல் சாம்சங் நிறுவனத்தின் பெயரையே இன்னும் உயர்த்தி கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு படைப்பு என்று தான் சொல்ல வேண்டும்.

இப்படி சொல்வதற்கு காரணமும் இருக்கிறது. கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் வெளியான 2 மாதத்திலேயே 1 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்தது. முக்கியமாக இந்த ஸ்மார்ட்போன் மூலம், சாம்சங் நிறுவனத்தின் வருவாயும் உயர்ந்துள்ளது. இத்தகைய ஸ்மார்ட்போனை கறுப்பு நிறுத்தில் வெளியிட உள்ளது என்பது புதிய செய்தி.

ஏனென்றால் சாம்சங் என்றாலே நிறுவனத்தின் பெயர் என்பதையும் தாண்டி, பரபரப்பு என்றும் ஒரு எண்ணம் மக்கள் மத்தியில் உருவாகி வருகிறது. சமீபத்தில் கூட சிஎஸ்ஆர் பிரிட்டிஷ் சிப் நிறுவனத்தை சாம்சங் நிறுவனம் 31 கோடி டாலருக்கு வாங்கவதாக ஒரு செய்தி வெளியானது. இதனால் ஸ்மார்ட்போன்களில் புதிய தொழில் நுட்ப

வசதியினையும் வழங்கலாம்.

பொதுவாகவே கறுப்பு நிறத்தில் இருக்கும் எலக்ட்ரானிக் சாதனங்களை வாடிக்கையாளர்கள் வெகுவாக விரும்பி வாங்குகின்றனர். இதில் அதிக விற்பனையை அள்ளி தந்த கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன், கறுப்பு நிறத்தில் அறிமுகமானால் இதன் விற்பனை இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்