200MP + 50MP + 50MP + 50MP.. இப்படி ஒரு Camera Phone-க்கு தான் உலகமே வெயிட்டிங்! என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்25 சீரிஸ் (Galaxy S25 Series) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இன்னும் நிறைய நேரம் உள்ளது. சாம்சங் நிறுவனத்திடம் இருந்து விரைவில் அறிமுகமாக உள்ளது நெக்ஸ்ட் ஜெனரேஷன் கேலக்ஸி ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள் (Galaxy Foldable Smartphones) தான். ஆனாலும் கூட கேலக்ஸி எஸ்25 சீரிஸில் உள்ள பிரீமியம் மாடலான கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவை (Galaxy S25 Ultra) பற்றி கிடைத்துள்ள ஒரு லேட்டஸ்ட் அப்டேட்டை புறக்கணிப்பது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை!
ஏனென்றால்.. "இப்படி ஒரு கேமரா அப்கிரேட்டிற்கு தானே நாங்ககளெல்லாம் காத்திருக்கிறோம்!" என்று கூற வைக்கும்படியாக சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்த விரிவான விவரங்கள் லீக் ஆகியுள்ளன. நம்பகமான சோர்ஸ்களில் ஒன்றான ஐஸ் யுனிவர்ஸின் கூற்றுப்படி, எஸ்25 அல்ட்ரா மாடலானது அதன் முன்னோடிகளில் நாம் கண்ட அதே குவாட்-கேமரா செட்டப்பை தான் பேக் செய்யும்.

ஆனால் கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவின் இரண்டு முக்கிய மேம்படுத்தல்கள் இருக்கும். இது 200எம்பி ப்ரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் + 5எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50எம்பி சூப்பர் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவைகளை உள்ளடக்கிய குவாட் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும்.
அதாவது ஒப்பீட்டளவில் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அல்ட்ரா வைடு மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸ்களில் பெரிய அளவிலான மேம்பாடுகள் செய்யப்படவுள்ளது. நினைவூட்டும் வண்ணம் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 10எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளது. ப்ரைமரி மற்றும் சூப்பர் டெலிஃபோட்டோ சென்சார்களை பொறுத்தவரை 200எம்பி மற்றும் 50எம்பி கேமராக்கள் உள்ளன.
இதுதவிர்த்து முந்தைய வதந்திகள் சாம்சங் நிறுவனம் அதன் எஸ்25 அல்ட்ராவில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டு வரலாம் என்று பரிந்துரைத்தன. ஆனால் ஐஸ் யுனிவர்ஸ் வழியாக கிடைத்துள்ள இந்த நம்பகமான தகவல் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் குவாட்-கேமரா செட்டப் தக்கவைக்கப்படும் என்பதை உறுதி செய்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன மாற்றங்களை மற்றும் அம்சங்களை எதிர்பார்க்கலாம்? எஸ்25 சீரீஸின் பிரீமியம் வேரியண்ட் ஆன எஸ்25 அல்ட்ராவானது புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 சிப்செட் (Snapdragon 8 Gen 4 SoC) மூலம் இயக்கப்படலாம் மற்றும் இது ஆண்ட்ராய்டு 15 (Android 15) அடிப்படையிலான ஒன்யுஐ 7 உடன் வரும் என்றும் எதிர்பார்க்கிறோம். வடிவமைப்பு மாற்றங்களை பொறுத்தவரை, எஸ்24 அல்ட்ராவுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவாகவே இருக்கலாம்.
அடுத்த சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு ஈவென்ட் 2024 (Samsung Galaxy Unpacked Event 2024) எப்போது நடக்கும், இதில் என்னென்ன போன்கள் அறிமுகமாகும்? சாம்சங்கின் அடுத்த அன்பேக்டு நிகழ்வானது 2024 ஜூலை மாத தொடக்கத்தில், இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஜூலை 10 ஆம் தேதி நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னரே குறிப்பிட்டபடி இந்நிகழ்வில் சாம்சங் நிறுவனம் தனது புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களான சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 (Samsung Galaxy Z Fold 6) மற்றும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 (Samsung Galaxy Z Flip 6) ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுவாரசியமாக இந்த ஆண்டு, சாம்சங் நிறுவனமானது 3 ஃபோல்டபிள் போன்களை அறிமுகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக 2 போல்டபிள் ஸ்மார்ட்போன்களை மட்டுமே சாம்சங் அறிமுகம் செய்யும். ஆனால் இந்தாண்டு, கிளாம்ஷெல்-பாணியில் (Clamshell-style) மடிக்கக்கூடிய சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 உடன் சேர்த்து புக்-ஸ்டைல் பாணியில் (Book-style) மடிக்கக்கூடிய 2 கேலக்ஸி இசட் ஃபோல்ட் மாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








