Home
Mobile

புதிய வசதியுடன் ஸ்பைஸ் பட்ஜெட் மொபைல்!

By Super
புதிய வசதியுடன் ஸ்பைஸ் பட்ஜெட் மொபைல்!

இதுவரை பல மொபைல்களை கொடுத்து அசத்திய ஸ்பைஸ் மொபைல் மீண்டும் ஒரு புதிய அற்புதமான மொபைல் சக்தியை உருவாக்கியிருக்கிறது.

ஸ்பைஸ் எம்-5455 ஃப்லோ என்ற மொபைல் தான் அது. இந்த பட்ஜெட் மொபைல் 6 செ.மீ கொண்ட கியூவிஜிஏ தொடுதிரையை கொண்டிருக்கும். இந்த மொபைலில் மகிழச்சியான விஷயமே, இதில் அழைப்பை தொடருவும், துண்டிக்கவும் பிரத்தியேகமாக ஒரு பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மொபைலுடைய வடிவமைப்பு, பாரப்பவர்களின் கண்களை வேறெங்கும் திரும்ப விடுவதில்லை. அத்தகைய அழகாக ஜொலிக்கும் வடிமவைப்பை பெற்றுள்ளது இந்த புதிய ஸ்பைஸ் எம்-5455 ஃப்லோ மொபைல்.

இந்த புதிய மொபைல் டியூவல் சிம் பொருத்தும் வசதியையும் கொடுக்கும். இதில் அழகான வீடியோ மற்றும் புகைப்படமும் எடுக்க 1.3 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளது.

மல்டி ஃபார்மெடுக்கு சப்போர்ட் செய்யும் இந்த மொபைலில் ஆடியோ மற்றும் வீடியோ வசதியினையும் பெறலாம். 8ஜிபி வரை மெமரி வசதியினையும் இந்த மொபைல் அளிக்கிறது.

தகவல்களை பரிமாறிக் கொள்வது பற்றியோ, பேட்டரி பற்றியோ இந்த மொபைலை பொருத்த வரை கவலை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதில் 950 எம்ஏஎச் எல்ஐ-அயான் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பேட்டரியின் மூலம் 4 மணி நேரம் டாக் டைம் மற்றும் 230 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் பெற முடியும். தகவல் பரிமாற்றத்துக்கு புளூடூத் வசதியும் இருக்கிறது.

பட்ஜெட் விலை ரகத்தை சேர்ந்த இந்த ஸ்பைஸ் எம்-5455 ஃப்லோ மொபைலை ரூ.2,400 விலைக்கு கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X