விரைவில் வருகிறது புதிய சாம்சங் கேலக்ஸி நோட்2 !

By Karthikeyan
|
விரைவில் வருகிறது புதிய சாம்சங் கேலக்ஸி நோட்2 !

சாம்சங் கேலக்ஸி நோட் 10.1 என்ற தனது புதிய டேப்லெட்டைக் களமிறக்கிய சாம்சங், இதன் தொடர்ச்சியாக கேலக்ஸி நோட் 2 என்ற ஒரு புதிய ஸ்மார்ட்போனை விரைவில் களமிறக்கப் போவதாக சாம்சங் அறிவித்திருந்தது.

ஆனால் அதற்குள் இந்த புதிய கேலக்ஸி நோட் 2 போனின் படம் மற்றும் அதன் தொழில் நுட்ப விவரங்களை பிரபல இணைய தளம் ஒன்று வெளியிட்டிருக்கிறது. இந்த மேற்சொன்ன இணையதளம் தரும் தகவலின்படி புதிய சாம்சங் கேலக்ஸி நோட்2 ஸ்மார்ட்போன் சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது.

குறிப்பாக இந்த புதிய கேலக்ஸி நோட் 2 ஸ்மார்ட்போன் க்வாட் கோர் 1.5 ஜிஹெர்ட்ஸ் எக்சினோஸ் 5 க்வாட் சிப்செட்டைக் கொண்டிருக்கும். அதோடு இதன் 5.5 இன்ச் சூப்பர் அமோலெட் திரை மிகத் துல்லியமாக இருக்கும். இதன் 8எம்பி கேமரா சூப்பாரான வீடியோக்கள் மற்றும் படங்களை எடுக்கும். மேலும் இந்த போன் ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வரும். இதை ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்கு தளத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.

மேற்சொன்ன தகவல்கள் அனைத்தையும் இன்னும் சாம்சங் உறுதி செய்யவில்லை. வதந்தியாக வந்திருக்கும் இந்த தகவல்கள் உண்மையாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X