ரேஸில் முந்துவது யார்? சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் ஒன்ப்ளஸ் 5 இடையே கடும்போட்டி

By Siva
|

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகிய ஒன்ப்ளஸ் நிறுவனம் ஒன்ப்ளஸ்3 மற்றும் 3T மாடல்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களிடன் நன்மதிப்பை பெற்ற நிலையில் அடுத்த தயாரிப்பான ஒன்ப்ளஸ் 5 மாடல் மிக விரைவில் வெளியாக உள்ளது. இந்த மாடலுக்கும் சாம்சங் S8 மாடல் மற்றும் எல்ஜி ஜி6 மாடல் ஆகியவற்றுக்கு கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 சாம்சங் கேலக்ஸி S8 மாடலை ஒன்ப்ளஸ் 5 மாடல் முந்துவதற்கு 5 காரணங்கள்

ஒன்ப்ளஸ் 3 மாடலுக்கு பின்னர் ஒன்ப்ளஸ் 5 மாடலுக்கு திடீரென இந்நிறுவனம் ஜம்ப் ஆக காரணம், ஒன்ப்ளஸ் 4 மாடல் பெரும்பாலான ஆசிய நாடுகளில் தோல்வி அடைந்தது என்பதுதான். இன்று சாம்சங் S8 மாடலுக்கும் ஒன்ப்ளஸ் 5 மாடலுக்கும் இடையே உள்ள 5 முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

பெஸல் லெஸ் டிசைன்:

பெஸல் லெஸ் டிசைன்:

கடந்த சில நாட்களாக இணையதளங்களில் கசிந்துள்ள தகவலின்படி ஒன்ப்ளஸ் 5 மாடல் ஸ்மார்ட்போன் வழக்கமான பெஸல் மாடலில் இருந்து வேறுபட்டு பெஸல் லெஸ் மாடலுக்கு மாறியிருக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் ஸ்க்ரீன் சைஸும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியான பெஸல் லெஸ் மாடலான கேலக்ஸி S8 மாடல் மற்றும் எல்ஜி ஜி6 ஆகியவை பெஸல் லெஸ் மாடல் என்பது தெரிந்ததே.மேலும் இந்த புதிய மாடலில் ஹோம் பட்டன் முன்பக்கமும், பிங்கர் பிரிண்ட் சென்சார் பின்பக்கமும் இருக்கும் என்று கசிந்துள்ள தகவல்களில் இருந்து தெரிய வருகிறது. மேலும் ஒன்ப்ளஸ் 3T மாடல் போலவே இந்த புதிய ஒன்ப்ளஸ் 5 மாடல் ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் டிஸ்ப்ளேதான் இருக்கும். இருப்பினும் இந்த போனில் 2K ரெசலூசன் இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.

8GB ரேம்?

8GB ரேம்?

இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் இருந்து கசிந்துள்ள தகவலின்படி இந்த ஒன்ப்ளஸ் 5 மாடல் ஸ்மார்ட்போனில் 8GB ரேம் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

ஆனால் ஒன்ப்ளஸ் 3T மாடலில் 6GB ரேம் தான் இருந்தது என்பது தெரிந்ததே. இந்த கூடுதல் ரேம், பல போன்களில் இல்லாத ஒரு வசதி என்பது குறிப்பிடத்தக்கது. ரேமின் திறன் அதிகரிக்க அதிகரிக்கத்தான் போனின் வேகம் இருக்கும் என்பதால் இந்த மாடல் போனின் வேகம் குறித்து சொல்ல தேவையில்லை

டூயல் கேமிரா செட்டப்:

டூயல் கேமிரா செட்டப்:

நடுத்தர வகை மாடல்களில் இருந்து உயர்தர மாடல் வரை தற்போது டூயல் கேமிரா என்பது டிரெண்டாகி வரும் நிலையில் இந்த புதிய ஒன்ப்ளஸ் 5 மாடலிலும் டூயல் கேமிரா இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

மேலும் இந்த மாடல் குறித்த வெளிவந்த வதந்திகளின்படி இந்த போனில் 23MP பின்புற கேமிராவும், 16MP செல்பி கேமிராவும் இருக்கும். மேலும் இந்த டூயல் கேமிராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலேசேஷன் இருக்கின்றது என்பது கூடுதல் வசதி ஆகும்

எல்ஜி ஜி6 மொபைல் போன் எதிர்பார்ப்புகளுடன் விரைவில் வருகிறது!எல்ஜி ஜி6 மொபைல் போன் எதிர்பார்ப்புகளுடன் விரைவில் வருகிறது!

அதெல்லாம் சரி, சார்ஜ் நிற்குமா?

அதெல்லாம் சரி, சார்ஜ் நிற்குமா?

பல ஆயிரங்கள் கொடுத்து ஒரு ஸ்மார்ட்போன் வாங்கினாலும் அதில் சார்ஜ் நிற்கவில்லை என்றால் எந்தவித பயனும் இல்லை. ஆனால் இந்த ஒன்ப்ளஸ் 5 மாடலில் 3500 mAh முதல் 4000 mAh வரை திறனுள்ள பேட்டரி இருப்பதால் பேட்டரியின் லைப் குறித்தும் சார்ஜ் குறித்தும் கவலைப்பட தேவையில்லை. மேலும் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்டை பொருத்தவரையில் பேட்டரியின் லைப் பாதுகாப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

என்ன ரேட் பாஸ்?

என்ன ரேட் பாஸ்?

எல்லாம் சரி தலைவரே! ரொம்ப முக்கியமான விஷயம் இந்த போன் என்ன விலை? என்பதுதான். இந்த ஒன்ப்ளஸ் 5 மாடல் போன் $350 முதல் $500 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
After the launch of successful OnePlus 3/3T, Carl Pei's OnePlus is reportedly working on its successor, allegedly called as OnePlus 5.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X