Home
Mobile

முழுசா ரூ.8000 விலை குறைப்பு.. கூடவே 10% பேங்க் ஆஃபர்.. இந்த Google Pixel போனை வாங்க இதுவே சரியான நேரம்!

இந்தியாவில் கூகுளின் மிகவும் பிரபலமான 5ஜி போன்களில் பிக்சல் 7ஏ (Google Pixel 7a) ஸ்மார்ட்போனும் ஒன்றாகும். நல்ல கேமரா, நல்ல செயல்திறன் மற்றும் நல்ல டிஸ்பிளேவை தேடும் எவருமே பிக்சல் 7ஏ மாடலை அவ்வளவு எளிதாக கடந்து போக முடியாது. தற்போது இது மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

பிளிப்கார்ட் வலைத்தளமானது தனது பிக் பில்லியன் டேஸ் விற்பனையை முடித்த பிறகு பிளிப்கார்ட் பிக் தசரா என்கிற விற்பனையை நடத்தி வருகிறது. வருகிற அக்டோபர் 29 ஆம் தேதி வரை நடக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த விற்பனையின் போது, பிக்சல் 7ஏ மாடலானது எந்த விதிமுறைகளும் நிபந்தனைகளும் இல்லாமல் ரூ.35,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

இந்த Google Pixel போனை வாங்க இதுவே சரியான நேரம்!

அதாவது பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.8000 நேரடி தள்ளுபடியை பெற்றுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இந்த பிக்சல் போனின் அசல் விலை ரூ.43,999 ஆகும். இது சில மாதங்களுக்கு முன்பு தான் கூகுள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிக்சல் போனாக இந்தியாவில் அறிமுகமானது.

ரூ.8,000 என்கிற நேரடி தள்ளுபடியை தவிர்த்து, பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போன் மீது தேனிர்த்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுளுக்கு 10 சதவீத கூடுதல் தள்ளுபடியும் அணுக கிடைக்கிறது. இதன்கீழ் பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனின் இறுதி விலையில் இருந்து சில நூறு ரூபாய்களை குறைக்க முடியும். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க.. பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா என்கிற சந்தேகம் உங்களுக்கு இருப்பின், இதோ அதற்கான விடை!

இந்த Google Pixel போனை வாங்க இதுவே சரியான நேரம்!

ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால்.. பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போன் ஆனது கொடுக்கும் பணத்திற்கு மிகவும் வொர்த் ஆன ஸ்மார்ட்போனாகும். ரூ.30,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் நீங்கள் ஒரு நல்ல கேமரா ஸ்மார்ட்போனை தேடினால் பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனை நிச்சயம் கருத்தில் கொள்ளலாம்.

கூகுளின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஏராளமான விவரங்கள், இயற்கையான வண்ணங்கள் மற்றும் சிறந்த லைட்டிங் நிலைகளில் போதுமான டைனமிக் ரேன்ஜ் உடனான புகைப்படங்களை கைப்பற்றுகிறது. குறைந்த வெளிச்சத்தில் புகைப்படம் எடுத்தாலும் கூட நல்ல அவுட்புட் கிடைக்கிறது. குறிப்பாக போர்ட்ரெய்ட் போட்டோக்களில் பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போன் மிகவும் தனித்து நிற்கும் ஒரு மாடலாகும்.

அடுத்ததாக, நீங்கள் ஒரு நல்ல வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்கும் ஒரு தரமான டிஸ்பிளேவை பேக் செய்யும் ஒரு ஸ்மார்ட்போனை தேடுகிறீர்கள் என்றாலும் கூட, பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனை கருத்தில் கொள்ளலாம். இது சிறந்த பிரைட்னஸ் லெவல்கள் மற்றும் துடிப்பான வண்ணங்களுடன் வேகமான 90ஹெர்ட்ஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளேவின் அளவு 6.1 இன்ச் ஆகும்.

சாஃப்ட்வேர் பற்றி சொல்லவே வேண்டாம். சந்தையில் உள்ள பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன்களை பிக்சல் 7ஏ மாடல் அசால்ட் ஆக வெல்லும். எந்த சிக்கலும் இல்லாத மற்றும் மிகவும் வேகமான யூஸர் இன்டர்பேஸை பெறுவீர்கள். மேலும் சந்தையில் கிடைக்கும் மற்ற போன்களை போலல்லாமல், இதில் எந்த ப்ளோட்வேரும் இல்லை.

இந்த Google Pixel போனை வாங்க இதுவே சரியான நேரம்!

பெர்ஃபார்மென்ஸ் என்று வரும் போதும் கூட பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனில் எந்த குறையும் சொல்ல முடியாது. ஏனென்றால் இது கூகுளின் பிளாக்ஷிப் சிப்செட் ஆன டென்சர் ஜி2 மூலம் இயங்குகிறது. இது கடந்த ஆண்டு வெளியான பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களிலும் காணப்படுகிறது. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு சின்ன குறை உள்ளது. கேமிங் போன்ற கனமான பணிகளைச் செய்யும்போது அல்லது கேமராவை பயன்படுத்தும் போது லேசாக ஹீட் அடைகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் இன்னொரு சிறிய குறையும் உள்ளது. அது என்னவென்றால், பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸில் சார்ஜர் இடம்பெறாது. அதாவது ஒரு சார்ஜரை வாங்குவதற்கு நீங்கள் கூடுதல் பணம் செலவழிக்க வேண்டும் அல்லது பழைய சார்ஜரை பயன்படுத்த வேண்டி இருக்கும். இந்த 2 குறைகளும் உங்களுக்கு பெரிதாக தெரியவில்லை என்றால்.. பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போன் முழுக்க முழுக்க உங்களுக்கானது தான்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Rs 8000 Direct Discount on Google Pixel 7a 5G Smartphone in Flipkart Big Dussehra Sale 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X